பிக் பாஸில் இருந்து வெளியேறிய பின்னர் சேரன் போட்ட முதல் பதிவு.!

0
3844

தற்போது விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக இறுதிகட்டத்தில் நோக்கி சென்றுகொண்டிருக்கிறது பிக் பாஸ் சீசன் 3 தமிழ்.இன்னும் சில நாட்களில் இந்த பிக் பாஸ் சீசன் 3 இன் டைட்டில் வின்னர் யார்? என்று தெரிவதற்காக ஆவலுடன் தமிழக மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். மேலும், போனவாரம் சேரன் அவர்கள் எழிமினேஷன் செய்யப்பட்டார்.ஆனால் இதுவரை நடந்த பிக் பாஸ் சீசன்களில் எல்லாம் வயது அதிகமாக உள்ளார்கள் முதலிலேயே எழிமினேட் செய்துவிடுவார்கள்.

cheran

ஆனால் இந்த வரிசையில் சேரன் அவர்கள் தன்னுடைய விட நம்பிக்கையாலும், முயற்சியாலும் 91 நாட்கள் பிக்பாஸில் பயணம் செய்து தன்னுடைய திறமையை காட்டி உள்ளார். மேலும், இந்த வாரம் நடந்த கோல்டன் டிக்கெட் வெல்லும் போட்டியில் தனது உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் அவரால் சரியாக போட்டியில் பங்கேற்க முடியவில்லை. மேலும் இந்த வாரம் அவர் நாமினேஷனில் இருந்ததால் இந்த வாரம் வெளியேற்றப்பட்டார்.மேலும், இந்த வாரம் நடந்த ஒவ்வொரு போட்டியிலும் ஒவ்வொருவரும் போட்டி போட்டு கொண்டு தங்களுடைய திறமையைக் காட்டி வந்துள்ளனர். இந்த கோல்டன் டிக்கெட்டை முகின் அவர்கள் வென்றார்.

இதையும் பாருங்க : தர்ஷன் மீது கோபம் கொண்ட ஷெரின்.! காரணம் இது தானா.!

- Advertisement -

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த சேரன் அவர்கள் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார். அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கூறியது, நான் என்னுடைய அனைத்து ரசிகர்களுக்கும் தலை வணங்கி நிற்கிறேன்.மேலும்,இந்த பிக்பாஸ் வீட்டில் நான் இருந்த 91 நாட்களில் என்னை சரியாக புரிந்து கொள்ளும் வகையில் இருந்தது பயணம்.மேலும், எனக்கு ஆதரவு கொடுத்து இந்த அளவிற்கு அதாவது வயது அதிகம் உள்ளவர்களை இத்தனை நாட்கள் இருக்க தட்டிக்கொடுத்த என்னுடைய அன்பு ரசிகர்களுக்கும் , நல்ல இதயங்களுக்கும் என் மனமார்ந்த நன்றி என்றும் தெரிவித்தார்.

மேலும் அவர் நேர்மை, நற்பண்பு ,உண்மைக்கு குரல் கொடுக்கும் நீங்கள்தான் தலை சிறந்த மனிதர்கள்.என்னை சினிமாத்துறையில் நடிகராகவும், தயாரிப்பாளராகவும் இருந்து எனக்கு ஆதரவு கொடுத்தது மட்டும் இல்லாமல் நீண்ட இடைவெளிக்கு பிறகு என்னை உங்களில் ஒருவராக ஏற்றுக் கொண்டதில் மகிழ்ச்சியும், நன்றியும் தெரிவித்து எழுதியிருந்தார். இதற்காக நெட்டிசன்கள் தங்களுடைய கருத்துகளை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.

-விளம்பரம்-

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement