ஹீரோயினா நடிப்பன்னு எதிர்பார்த்த இப்படி நடிசிட்டு இருக்கீங்க – அட்வைஸ் செய்த ரசிகருக்கு ஷிவானி கொடுத்த பதில்.

0
1099
shivani
- Advertisement -

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்ற எத்தனையோ நடிகர் நடிகைகள் இருக்கின்றன். அதுவும் குறிப்பாக விஜய் டிவியில் இருந்து பலர் சினிமாவில் நுழைந்து இருக்கின்றனர். அந்த வகையில் விக்ரம் படத்தின் மூலம் சினிமா துறையில் சமீபத்தில் நுழைந்து இருப்பது ஷிவானி தான். ஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர். ஆனால், அதற்கு முன் சிவானி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் கொடுத்த சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானார். பிறகு பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம் மற்றும் ஜீ தமிழ் சேனலில் இரட்டை ரோஜா உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து பிரபலமடைந்தார்.

-விளம்பரம்-

நடிகை சிவானி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அதிலும் இவர் பதிவிடும் பெரும்பாலான புகைப்படங்கள் கவர்ச்சியாகத் தான் இருந்து வந்தது. இதனால் இவரை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 20 லட்சத்துக்கும் மேல் ரசிகர்கள் பின்தொடர்ந்து வருகிறார்கள். மேலும், இவருக்கு சீரியலில் கிடைத்த ரசிகர்களை விட போட்டோஷூட் மூலம் கிடைத்த ரசிகர்கள் தான் அதிகம்.

இதையும் பாருங்க : லண்டன் சொத்து முதல், பல சொகுசு கார்கள் வரை – கமலின் முழு சொத்து மதிப்பு எத்தனை கோடி தெரியுமா ? (ஆனா, தேர்தலின் போது தாக்கல் செய்து சொத்து மதிப்பு இவ்ளோ தான்.)

- Advertisement -

விக்ரம் படத்தில் ஷிவானி :

இந்த படத்தில் ஷிவானி கமிட் ஆகி இருக்கிறார் என்ற அறிவிப்பு வெளியான போதே 5 மணி ரசிகர்கள் பலரும் குஷியில் ஆழ்ந்தனர். ஷிவானி, விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிப்பாரா, பஹத்துக்கு ஜோடியாக நடிப்பாரா என்றெல்லாம் கனவில் மிதந்து வந்தனர். ஆனால், இறுதியில் ஷிவானி இந்த படத்தில் விஜய் சேதுபதியின் மூன்றில் ஒரு மனைவியாக ஒரு சில நிமிடங்கள் மட்டுமே வந்து சென்று இருந்தார்.

ஒரே வசனத்தால் பேமஸ் ஆன மகேஸ்வரி :

இந்த படத்தில் இடம்பெறும் விஜய் சேதுபதி போட்டோ எடுத்துக்கொள்ளும் காட்சியை ரசிகர்கள் சோசியல் மீடியாவில் பகிர்ந்த பலரும் vj மகேஸ்வரியை தான் அதிகம் பாராட்டி வருகின்றனர், அதிலும் குறிப்பாக ‘heart எந்த பக்கம் இருக்கு’ என்ற வசனத்தை போட்டு பலரும் vj மகேஸ்வரியை தான் பாராட்டி வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் முதன் முறையாக தன் கதாபாத்திரம் குறித்து மனம் திறந்துள்ளார் ஷிவானி. சமீபத்தில் ஷிவானி ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

-விளம்பரம்-

ரசிகர் கொடுத்த அட்வைஸ் :

அப்போது ரசிகர் ஒருவர் ‘பிக் பாஸுக்கு பின்னர் உங்களை ஒரு ஹீரோயினாக தான் பார்க்க ஆசைப்பட்டோம் இப்படி சின்ன ரோலில் இல்லை. தயவு செய்து புத்திசாலித்தனமாக ஸ்க்ரிப்ட்டை தேர்வு செய்யுங்கள்’ என்று கூறி இருந்தார். இதற்கு பதில் அளித்த ஷிவானி ‘உங்கள் அக்கரைக்கு நன்றி, சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வர மிகவும் கடினமாக முயற்சி செய்யும் சாதாரண பெண் தான் நான்.

Bigg Boss Shivani Irked Vadivelu Fans | ஷிவானி நாராயணன்

என் நம்பிக்கையை நான் நம்புகிறேன்

இந்த முயற்சிக்கு அதிக பெருமை, கடின உழைப்பு தேவை. நான் இதன் மூலம் பயிற்சியை தான் எடுத்துக்கொள்கிறேன். எனக்கு கொடுக்கப்பட்ட வேலையை எப்படி ஒழுங்காக செய்ய வேண்டும் என்பதை மட்டும் தான் பார்ப்பேன். இன்னும் நிறைய தூரம் செல்ல வேண்டி உள்ளது, இது வெறும் ஆரம்பம் தான், என் நம்பிக்கையை நான் நம்புகிறேன் என்று அந்த ரசிகருக்கு பதில் அளித்துள்ளார் ஷிவானி. தற்போது இவர் வடிவேலுவின் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் நாயகியாக நடித்து வருகிறார்.

Advertisement