விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் சிவானி ஆனால் இவருக்கு சீரியலில் கிடைத்த ரசிகர்களை விட போட்டோ ஷூட் மூலம் கிடைத்த ரசிகர்கள் தான் அதிகம்.சமீபகாலமாகவே நடிகை சிவானி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார் அதிலும் இவர் பதிவிடும் பெரும்பாலான புகைப்படங்கள் கவர்ச்சியாகத்தான் இருந்து வந்தது.
பொதுவாக மாலை நேரத்தில் புகைப்படத்தை பதிவிடும் பிக் பாஸ் நெருங்க இருப்பதால் சதா இன்ஸ்டாகிராமில் தான் குடியிருந்து வருகிறார். இவரை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 20 லட்சம் பேர் பின்தொடர்ந்து வருகிறார்கள். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதால் இவரது ரசிகர்கள் குஷியில் ஆழ்ந்தனர். ஆனால், இவர் பிக் பாஸ் வீட்டில் இவர் விளையாடிய விதம் பெரும் ஏமாற்றத்தை தான் ஏற்படுத்தி இருந்தது.
இதையும் பாருங்க : ‘ஆரம்பிக்களாங்களா’ – வெளியான கமலின் விக்ரம் படத்தின் வெறித்தனமாக பர்ஸ்ட் லுக் போஸ்டர்.
ஷிவானிக்கு சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் குவிந்ததற்கு காரணம் அவருடைய 4 மணி புகைப்படங்கள் தான். இப்படி ஒரு நிலையில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய ஷிவானி, தனது கவர்ச்சியான புகைப்படங்களை எல்லாம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நீக்கி இருந்தார் ஷிவானி, கிட்டத்தட்ட 100க்கும் மேற்பட்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நீக்கினார் ஷிவானி.
இருப்பினும் தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களை கவரும் வகையில் கிளாமர் புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார் ஷிவானி. அந்த வகையில் தற்போது கடற்கரையில் மார்டன் உடையில் கலக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த பலர் ஷிவானியை அரேபியன் குதிரை போல இருக்கின்றார் என்று கூறி வருகின்றனர்.