நான் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போது இத்தனை லட்சம் பணத்தை எடுத்துள்ளார் – நடிகை பகீர் புகார்.

0
2889
rashmi
- Advertisement -

பாலிவுட் திரையுலகில் ஷாருக்கானின் ‘யெஹ் லம்ஹே ஜுடாய் கே’ மற்றும் சல்மான் கானின் ‘தபாங் 2’ ஆகிய இரண்டு படங்களில் நடித்தவர் நடிகை ரஸாமி தேசாயி. இவர் பல போஜ்பூரி படங்களிலும் நடித்திருக்கிறார். டிவி சேனல்களில் ‘ராவன், பரி ஹூன் மெயின், ஸ்ஸ்ஸ்ஸ்.. பிர் ஹோய் ஹாய், உத்தரன், ஹான்டட் நைட்ஸ், இஸ்க் கா ரங் சேஃப்டு’ போன்ற பல சீரியல்களிலும் நடித்திருக்கிறார் நடிகை ரஸாமி தேசாயி கடந்த 2019-ஆம் ஆண்டு கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பான ரியாலிட்டி ஷோ ‘பிக் பாஸ்’. இந்த ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவை ஹிந்தி சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான சல்மான் கான் தொகுத்து வழங்கியிருந்தார். கடந்த ஆண்டு ஒளிபரப்பானது ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 13 என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Actress Rashmi Desai

இந்த ‘பிக் பாஸ்’ என்ற ரியாலிட்டி ஷோவில் நடிகை ரஸாமி தேசாயியும் ஒரு போட்டியாளராக இருந்தார். இதில் பிரபல ஹிந்தி பட நடிகர் அர்ஹான் கானும் பங்கேற்றிருந்தார். அப்போது, அர்ஹான் கானும், ரஸாமி தேசாயியும் காதலிக்கத் தொடங்கினார்கள். ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவை தொகுத்து வழங்கிய சல்மான் கான், அர்ஹான் கானுக்கு ஆல்ரெடி திருமணமாகி விட்டது என்று ரஸாமி தேசாயிடம் கூறினார்

இதையும் பாருங்க : கனவு நினைவானது, வாழ்நாள் முழுதும் அஜித் ரசிகை- யாஷிகா போட்ட ட்வீட்.

- Advertisement -

அதுமட்டுமின்றி, அர்ஹான் கானுக்கு ஒரு குழந்தையும் இருப்பதாக ரஸாமி தேசாயிற்கு ஷாக் தகவல் கிடைத்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து ரஸாமி தேசாயி, அர்ஹான் கானுடனான காதலை முறித்துக் கொண்டார். இப்போது, ரஸாமி தேசாயின் வங்கி கணக்கில் இருந்து நடிகர் அர்ஹான் கான் ரூ.15 லட்சம் பணம் எடுத்து மோசடி செய்திருப்பதாக தகவல் வந்திருக்கிறது.

இது தொடர்பாக நடிகை ரஸாமி தேசாயி பேசுகையில் “நான் பிக் பாஸ் ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டபோது, எனது வங்கி கணக்கில் இருந்து அர்ஹான் கான் ரூ.15 லட்சத்திற்கு மேல் எடுத்திருக்கிறார். அதை இப்பொழுது கேட்டால் அவர் தர மறுக்கிறார். இதனால் எனக்கு மிகவும் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது” என்று கூறியிருக்கிறார்.

இதையும் பாருங்க : ஜோதிகா தஞ்சை கோவில் விவகாரம், ஜோதிகா கருத்துக்கு ஆதரவு தெரிவித்தேனா? – விஜய்சேதுபதி விளக்கம்

-விளம்பரம்-

இதனைத் தொடர்ந்து அர்ஹான் கான் இது தொடர்பாக பேசுகையில் “நடிகை ரஸாமி தேசாயின் நிறுவனத்தில் நானும் ஒரு பங்குதாரராக இருந்திருக்கிறேன். ஆகையால், எனது லாபம் மற்றும் கடனை திருப்பி கொடுத்த பிறகு, அதன் மூலம் இவ்வளவு பணம் எனக்கு வந்திருக்கிறது என்று நினைக்கிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.

Advertisement