மன்னிப்பு கேட்டகவில்லை என்றால் சினேகன் மீது மானநஷ்ட வழக்கு தொடர்வேன்- ஆவேசத்தில் நடிகை ஜெயலட்சுமி

0
616
- Advertisement -

சினேகன் மீது மானநஷ்ட வழக்கு தொடர்வேன் என்று சின்னத்திரை நடிகை ஜெயலட்சுமி அளித்து இருக்கும் புகார் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் மிக பிரபலமான பாடலாசிரியராக திகழ்பவர் சினேகன். இவர் தற்போது வரை 2500 பாடல்கள் எழுதி இருக்கிறார். மேலும், இவர் சில படங்களிலும் நடித்தும் இருக்கிறார். இவர் பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ் ரசிகர்களிடம் பிரபலம் ஆனார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் சினேகன் அவர்கள் கன்னிகா என்ற நடிகையை திருமணம் செய்து கொண்டார். இவர் சமீபத்தில் வெளிவந்த ஆனந்தம் விளையாடும் வீடு என்ற படத்தில் நடித்து இருந்தார். இதனை தொடர்ந்து சினேகன் சில படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

இந்த நிலையில் தன்னுடைய பெயரை சொல்லி மோசடி நடப்பதாக சினேகன் புகார் அளித்து இருக்கும் சம்பவம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. புகாரில் சினேகன் கூறி இருப்பது, நான் 2015ஆம் ஆண்டில் இருந்து பவுண்டேஷன் நடத்தி வருகிறேன். இது என்னுடைய சொந்தப் பணத்தில் மூலம் உருவாக்கினேன். இதன் மூலம் நான் கஷ்டப்படும் மக்களுக்கு உதவி செய்து வருகிறேன். நான் இதற்கு முறையாக income.tax செலுத்தி இருக்கிறேன். அதற்கான ஆதாரங்களும் என்னிடம் இருக்கிறது. சமீபத்தில் என்னுடைய நண்பர்கள் சமூக வலைத்தளங்களில் என்னுடைய பெயரை பயன்படுத்தி பணம் மோசடி செய்கிறார்கள் என்று கூறியிருந்தார்கள்.

- Advertisement -

இதையும் பாருங்க : அந்த செட்ல பாதுகாப்பே இல்ல, இத்தனை லட்சம் சம்பளமும் கொடுக்கல – சீரியலில் இருந்து விலகிய காரணம் குறித்து பேசிய ஜீ தமிழ் சீரியல் நாயகி.

சினேகன் நடத்தும் பவுண்டேஷன் :

பின் income.tax யிலும் நீங்கள் மக்களிடம் பணம் வசூலித்து பவுண்டேஷன் நடத்துகிறீர்களா? என்று கேட்டார்கள். இது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. பின் அந்த சமூக வலைத்தளத்திற்கு சென்று பார்த்தேன். அதில் அவர்கள் கொடுத்திருந்த முகவரி எல்லாம் பொய்யாக இருந்தது. நான் என்னுடைய வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பி இருந்தேன். இரண்டு முறை நோட்டீஸ் அனுப்பியும் எந்த பதிலும் வரவில்லை. அது பொய்யான முகவரி என்று வந்தது. இதனை அடுத்து நான் என்னுடைய மேலாளர் மூலம் விசாரித்தேன். நாங்கள் அதிலிருந்த போன் நம்பர் மூலம் என்னுடைய மேலாளர் தொடர்பு கொண்டு பேசினார்.

-விளம்பரம்-

நடிகை ஜெயலட்சுமி மீது புகார் அளித்த சினேகன்:

இதை செய்வது சின்னத்திரை நடிகையும், வழக்கறினருமான ஜெயலட்சுமி என்று தெரியவந்தது. இதற்கு பிறகு நாங்கள் நேரடியாக செல்லக்கூடாது சட்டரீதியாக செல்லலாம் என்று போலீசில் புகார் அளித்து இருக்கிறேன். ஜெயலட்சுமி மீது மோசடி வழக்கு பதிவு செய்து பொதுமக்களை பாதுகாக்க வேண்டும். அது மட்டுமில்லாமல் சினேகம் பவுண்டேஷன் பெயரை தவறாக பயன்படுத்தியதற்காக ஜெயலட்சுமி மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த போலியான இணையதளத்தையும் முடக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

நடிகை ஜெயலட்சுமி அளித்த புகார்:

இதனை அடுத்து சினேகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நடிகை ஜெயலட்சுமி அவர்கள் கமிஷன் அலுவலகத்தில் புகார் அளித்திருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது, கவிஞர் சினேகன் என் மீது தவறாக போலீசில் புகார் அளித்திருக்கிறார். நான் கடந்த 2018 ஆம் ஆண்டு முதலில் சினேகம் அறக்கட்டளையை நடத்தி வருகிறேன். அதன் மூலம் மக்களுக்கு உணவு உட்பட பல்வேறு சேவைகளை செய்து இருக்கிறேன். கொரோனா காலத்திலும் மக்களுக்கு என்னுடைய சினேகம் அறக்கட்டளை மூலம் முடிந்த உதவிகளை செய்திருக்கிறேன்.

சினேகம் அறக்கட்டளை குறித்து சொன்னது:

ஆனால், சினேகன் தன்னுடைய சினேகம் அறக்கட்டளையின் பெயரை நான் தவறாக பயன்படுத்தி பொதுமக்களை தனியாக சந்தித்து பணம் பறிப்பதாக புகார் அளித்திருக்கிறார். இது முற்றிலும் பொய். என்னுடைய பெயரை களங்கப்படுத்துவதற்காகவும், நான் ஒரு பெண் என்று கூட பாராமல் என்னை அவமானப்படுத்தும் வகையிலும் அவர் இந்தக் குற்றச்சாட்டை சொல்லியிருக்கிறார். நான் பாஜகவின் மாநில மகளிர் அணி துணைத் தலைவராக இருக்கிறேன். அதேபோல அவர் ஒரு கட்சியில் இருக்கிறார்.

அரசியல் ஆதாயம்:

அரசியல் ஆதாயத்துக்காக கூட அவர் என் மீது இந்த குற்றச்சாட்டை வைத்திருக்கலாம் என நினைக்கிறேன். தமிழ்நாட்டில் பாஜக வளர்ந்து வருவது மற்ற கட்சிகளுக்கு பிடிக்கவில்லை. அதனால் தான் பாஜக நிர்வாகிகள் மீது இதுபோன்ற பொய்யான குற்றச்சாட்டுகளை வைக்கின்றனர். என்னுடைய அறக்கட்டளை அண்ணா நகரில் தான் செயல்பட்டு வருகிறது. ஆனால், கவிஞர் சினேகன் இணையத்தில் கிடைத்த முகவரி போலி என்று குறிப்பிட்டிருக்கிறார். என் மீது அவதூறாக குற்றம் சாட்டிய அவர் பொதுவெளியில் என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லை என்றால், நான் அவர் மீது மான நஷ்ட வழக்கு தொடருவேன் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

Advertisement