3 மணி வர கூட இருந்தேன்,வீட்டுக்கு போய் எல்லாரையும் விட்டு வந்துடரேனு போனார் – மயில்சாமியின் இறுதி தருணம் குறித்து சிவமணி.

0
904
mayilsamy
- Advertisement -

பிரபல காமெடி நடிகர் மயில்சாமி திடீர் மரணம் அடைந்திருக்கும் சம்பவம் திரைத்துறை மற்றும் ரசிகர்கள் மத்தியில் வெறும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.நேற்று சிவராத்திரியை முன்னிட்டு கேளம்பாக்கத்தில் உள்ள சிவன் கோயிலில் சிவராத்திரி பூஜை நடைபெற்றது. இதில் ட்ரம்ஸ் சிவமணி பங்கேற்று இசை கச்சேரி செய்து இருந்தார். இதில் மயிலசாமியும் கலந்துகொண்டு இருந்துள்ளார். விடிய விடிய சிவராத்திரி பூஜையில் இருந்துவிட்டு பின்னர் வீட்டிற்கு சென்று இருக்கிறார். சாமி தரிசனம் செய்துவிட்டு வீடு திரும்பிய போது அவருக்கு திடீர் மரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனை செல்லும் வழியிலேயே காலமாகி இருக்கிறது.

-விளம்பரம்-

இந்நிலையில் நடிகர் மயில்சாமியுடன் இறுதியாக பேசியது குறித்து சிவமணி பத்திரிக்கையாளர்களிடம் பேசுகையில் “நேற்று காலையில் என்னுடைய புகைப்படத்தை பார்த்துவிட்டு கமெண்ட் அடித்து மெசேஜ் அனுப்பினார். அந்த மெஜேஜில் நீங்க போட்டோவில் பார்ப்பதற்கு கலைஞர் ஐயாவை போன்று இருக்கீங்க அதே போல ஒரு போட்டோ எடுத்து அனுப்புங்க என்று கூறினார். இது போன்று தினமும் நானும் மயில் சாமியும் பேசிக்கொள்வோம்.

- Advertisement -

இப்படி பேசுகையில் தான் நேற்று மயில்சாமி என்னிடம் “அண்னே இன்றைக்கு சிவராத்திரி, நான் எப்போதும் போல இன்றைக்கு திருவண்ணாமலைக்கு செல்லவில்லை மேகநாதேஸ்வரர் கோவிலுக்கு செல்கிறேன் என்று கூறினார். நானும் இப்போதுதான் ஒரு கோவிலில் வாசித்து விட்டு வடபழனியில் வாசிக்க செல்கிறேன், அதற்கு பிறகு டி நகரில் வாசிக்கிறேன் என்று கூறி எப்படியாவது வந்துவிடுகிறேன் என்று கூறினேன். அதற்கு பிறகு போனில் கூப்பிட்டு கொண்டே இருந்தார்.

சொல்லப்போனால் அவர்தான் என்னை திருவண்ணாமலையில் வாசிக்க வைத்தார். கடுமையான சிவன் பக்தர் அவர். இன்று காலை 3 மணிவரையிலும் நான் மயிலசாமியுடன் இருந்தேன். அவர் ஓம்காரம் படி 3 மணி வரையிலும் மிகவும் மகிச்சியாக இருந்தார். அதற்கு பிறகு நான் மருதீஸ்வரர் கோவிலுக்கு செல்லயிருக்கிறேன் என்று அவரிடம் கூறினேன். அதற்கு அவர் “நான் வீட்டில் அனைவரையும் விட்டுவிட்டு நானும் அங்கு வந்துவிடுகிறேன் என்று. அனால் நான் அதற்கு அவரிடம் வரவேண்டாம் வீட்டிற்கு சென்று ஓய்வு எடுத்துக்கொள் நான் உன்னிடம் பிறகு பேசுகிறேன் என்று கூறினேன்.

-விளம்பரம்-

அதற்கு பிறகு நான் காரில் சென்று கொண்டிருக்கும்போது அவருக்கு நன்றி சொல்லும் வகையில் அவருக்கு வாய்ஸ் நோட் ஓன்று அனுப்பினேன். அதற்கு உடனே மயில் சாமி பதிலளித்தார். ஆனால் அந்த வாய்ஸ் நோட்டிலேயே அவருடன் குரல் கொஞ்சம் சோர்ந்து இருந்தது. பின்னர் நான் பல இடங்களுக்கு சென்று வாசித்தது விட்டு வரும் வழியில் எனக்கு 5.30 மணிக்கு போன் வந்தது. நான் உடனே எடுத்து எங்காவது வாசிக்க வேண்டுமா என கேட்க மகன் உடனே அழுக ஆரம்பித்துவிட்டார்.

அதோடு கடைசியாக நாங்கள் பேசிக்கொள்ளும் போது ஒரு விஷயத்தை கூறினார். அது ” நான் இந்த கோவிலுக்கு விவேக்கை கூப்பிட்டு வந்தேன் என பிரபலங்களுடைய பெயரை கூறிய பிறகு இந்த கோவிலுக்கு எப்படியாவது ரஜினிகாந்தை அழைத்து வந்து இந்த சிவலிங்கத்தில் அவர் பால் ஊற்றுவதை பார்க்க வேண்டும் என்று கூறினார்.

அதற்கு நான் அந்த விஷயம் கண்டிப்பாக நடக்கும் என்று கூறினேன், ஏனென்றால் ரஜினிகாந்தும் ஒரு தீவிர சிவபக்த்ர்தான். நடிகர் மயில் சாமியின் இறப்பு சினிமாத்துறைக்கும் சரி இசைத்துறைக்கும் சரி பெரிய இழப்பு, அதோடு அவர் தீவிர சிவபக்கத்தி கொண்டவர். இந்த சிவராத்திரியில் பகவான் அவருக்கு மோட்சம் கொடுத்திருக்கிறார். அவருடைய ஆத்மா சாந்தியடைய நான் இறைவனிடம் பிராத்திக்கிறேன் என்று கூறினார் ட்ரம்ஸ் சிவமணி.

Advertisement