சோம் சேகர் பதிவிட்ட வீடியோவிற்கு பிகில் பட நடிகை போட்ட கமன்ட் – இவங்க ரெண்டு பேருக்கும் என்ன சம்மந்தம் தெரியுமா ?

0
6422
som
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் சமீபத்தில் நிறைவடைந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் 4வது சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சமில்லதாக பல்வேறு புதிய போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அதில்இறுதி போட்டி வரை வந்த சோம் சேகரும் ஒருவர். பிக் பாஸ் நிகழ்ச்சியில் சோம் சேகரின் என்ட்ரியை பார்த்த போது யார் இவர்கள் என்று தான் அனைவரின் மனதிலும் ஓடியது. ரசிகர்களுக்கு வேண்டுமானால் சோம் சேகர் புதிதான நபராக இருக்கலாம். ஆனால் இவர் விஜய் தொலைக்காட்சியில் ஏற்கனவே வந்திருக்கிறாராம். கடந்த 2010ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அழகிய தமிழ் மகன் என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டிருக்கிறார்.

-விளம்பரம்-

அந்த நிகழ்ச்சி விஜய்யை சந்திக்கும் ஒரு நிகழ்ச்சியாக நடத்தப்பட்டது. அதே போல அந்த நிகழ்ச்சியில் இவர் இறுதி போட்டி வரை வந்தார். அதன் பின்னர் இவரை விஜய் டிவியில் காண முடியவில்லை. மேலும், இவர் அதன் பின்னர் சினிமாவில் வாய்ப்புத் தேடி அலைந்திருக்கிறார். மேலும் .பல்வேறு விளம்பர படங்களில் கூட நடித்திருக்கிறாராம். ஆனால், இவருக்கு சின்னத்திரையிலும் சரி, வெளியிலும் சரி சரியான வாய்ப்புகள் அமையவில்லை.

இதையும் பாருங்க : வரலாறு படத்தில் குட்டி அஜித்தாக நடித்த பையனா இது ? எப்படி வளந்துட்டார் பாருங்க.

- Advertisement -

இதனால் தனது பாதையை கொஞ்சம் மாற்றிய சோம் சேகர் MMA எனப்படும் மிக்ஸட் மார்ஷியல் ஆர்ட் எனப்படும் குத்து சண்டை பயிற்சியில் ஈடுபட்டிருக்கிறார்.கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்த விளையாட்டில் இருந்து வருகிறாராம் சோமசேகர். மேலும், இவர் மாநில மற்றும் தேசிய அளவில் MMA போட்டிகளில் தங்கப் பதக்கங்களை கூட வென்று இருக்கிறாராம். ஆனால் இவருக்கு சினிமாவில் எப்படியாவது நுழைந்துவிட வேண்டும் என்பதுதான் ஆசை.

மேலும், இவர் வேலையில்லா பட்டதாரி 2, பா பாண்டி, சூரரை போற்று போன்ற பல்வேறு படங்களில் சிறு சிறு வேடத்தில் நடித்துள்ளார். இப்படி ஒரு நிலையில் சோம் சேகர் பதிவிட்ட வீடீயோவின் கீழ், பிகில் படத்தில் அனிதா கதாபாத்திரத்தில் நடித்த ரேபா ஜான் ‘சோம்ம்ம் பெருமையா இருக்குடா’ என்று பதிவிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் பலர் இவருக்கும் சோம்கும் என்ன சம்மந்தம் என்று ஆச்சரியப்பட்டனர். சோம் சேகர் பல விளமபரபடங்களில் கூட நடித்துள்ளார். அப்படி இவர், ரேபா ஜானுடன் புரூக் பாண்ட் டீ விளம்பரத்தில் நடித்துள்ளார். அப்போது முதல் இப்போது வரை இவர்கள் இருவரும் நட்பை தொடர்ந்து வருவது ஒரு ஆச்சரியமான விஷயம் தான்.

-விளம்பரம்-
Advertisement