பிக்பாஸ் ஸ்ருதி பெரியசாமி நடித்த ஓரின சேர்க்கையாளர் படம்: ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ்

0
732
Sruthi
- Advertisement -

கடந்த பிக் பாஸ் சீசன் 5ல் பல முகம் தெரியாத நபர்கள் கலந்து கொண்டனர் அந்த வகையில் போட்டியாளராக கலந்து கொண்டவர் தான் மாடல் அழகியான சுருதி. இவர் சேலத்தை சேர்ந்தவர் மாடலிங் செய்து வருகிறார். இவரது கருப்பான நிறம் காரணமாக இவர் ஆரம்ப காலத்தில் பல அவமானங்களை சந்தித்து இருக்கிறார். இவர் சிறு வயதிலேயே தந்தையை இழந்து தாய் வளர்ப்பில் வளர்ந்த இவர் கல்லூரியில் ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் சீட் வாங்கி சிறப்பாக படித்து பின்னர் தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார்.

-விளம்பரம்-

அதன் பின்னர் வேறு வேலை தேடி சென்னை வந்தார். இவர் முதல் முதலில் ‘Darkess Divine ‘ என்ற ஒரு கான்சப்ட்டில் தமிழ் கடவுள் கருப்பாக இருப்பது போல போட்டோ ஷூட் ஒன்றை நடத்தி இருந்தார். அது மிகப்பெரிய வைரலானது. அதன் பின்னர் மிஸ் இந்தியா மிஸ் டிவா போன்ற பேஜென்ட் ஷோவில் இவர் பங்கேற்றுள்ளார். மேலும் இவர் மாடல் அழகி என்பதால் கவர்ச்சியான போட்டோ ஷூட்களை நடத்தி அவற்றினை சோசியல் மீடியாக்களில் பதிவிட்டு வருகிறார்.

- Advertisement -

வாழ்வு தொடங்குமிடம் நீதானே :

இந்நிலையில் சுருதி தற்போது “வாழ்வு தொடங்குமிடம் நீதானே” என்ற இனைய தொடரில் நடித்து வருகிறார். இப்படத்தை அறிமுக இயக்குனரான ஜெயராஜ் பழனி தொடரை இயக்கி வருகிறார். இந்த தொடரில் பிக் பாஸ் சுருதி, நிரஞ்சனா நெய்தியார், ஆறுமுக வேல், நிரஞ்சன், பிரதீப், ஆர்ஷ்த் ஃபாரிஸ் போன்றவர்கள் நடித்து வருகின்றனர். இந்த தொடருக்கு கோகுலகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்து தர்ஷன் ரவிக்குமார் இசையமைக்கிறார். மேலும் ரவி பாண்டியன் காலை இயக்கத்தை பார்த்துக்கொள்கிறார்.

லெஸ்பியன் கதை :

இந்த இனைய தொடரில் ஆணும் பெண்ணும் காதலிப்பது இயற்கையான விஷயம், ஆனால் அதுவே ஒரு ஆணும் ஆணும், பெண்னும் பெண்ணும் காதலிப்பது பல இடங்களில் நடக்கிறது. அப்படிதான் இந்த கதையில் ஆசாரா அனுஷ்டானங்களுடன் வாழும் இரண்டு இளம் பெண்கள் காதல் வயப்பட்டு லெஸ்பியனாக மாறுகின்றார். அவர்களை இந்த சமூகம் அங்கீகரித்தா? இல்லை எதிர்த்தா என்பதை கூறுவது தான் இந்த இனைய தொடர் என்று கூறப்படுகிறது.

-விளம்பரம்-

முதல் பார்வை :

லெஸ்பியன் வாழக்கையை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட இப்படத்தின் முதல் பார்வை மற்றும் போஸ்டர் கடந்த காதலர் தினத்தன்று வெளியாகி இனைய வாசிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் ஓரினசேர்கையாளர்கள் வாழக்கையை மையப்படுத்தி உருவாக்கி வரும் இடபடம் ஒடிடி தளமான ஷார்ட்ஃபிளிக்ஸில் வெளியாகும் நிலையில் ஒடிடி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

Advertisement