லாஸ்லியா இரட்டை முகத்தை காண்பிக்க துவங்கிவிட்டார்.! ட்வீட் செய்த சீசன் ஒன் நடிகை.!

0
6869
losliya
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரசிகர்களுக்கு பரிட்சயமான பல்வேறு போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய நாளில் இருந்தே பிக் பாஸ் நிகழ்ச்சியில் முன்னாள் போட்டியாளர்களை தேடி பிடித்து பேட்டி கண்டு வருகின்றனர். அந்த வகையில் சுஜா வருணி பிக் சீசன் 1 ல் போட்டியாளராக கலந்து கொண்டிருந்தார்.

-விளம்பரம்-

பிரபல நடிகையான சுஜா தமிழில் பல்வேறு படங்களில் நடனமாடியுள்ளார். மேலும், ஒரு சில படங்களிலும் நடித்துள்ளார். தற்போது சிவாஜியின் பேரனை திருமணம் செய்து கொண்டு ஒரு குழந்தைக்கு தாயாகவும் மாறவுள்ளார். சமீபத்தில் இவர் இந்த பிக் பாஸ் சீசனில் கலந்து கொண்டுள்ள லாஸ்லியாவை பற்றி தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

- Advertisement -

முதல் சீசனில் ஓவியா, இரண்டாவது சீசனில் யாஷிகா என்று இளம் பெண் போட்டியாளர்கள் தான் இளசுகளின் பேவரைட்டாக இருந்து வந்தனர். அதே போல இந்த சீஸனின் ஆரம்பத்தில் லாஸ்லியா தான் பல இளசுகளின் பேவரைட்டாக இருந்து வந்தார்.

ஆனால், கடந்த சில நாட்களாக இவரது பெயரை இவரே டேமேஜ் செய்து கொண்டு வருகிறார். இந்த நிலையில் லாஸ்லியா குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள சுஜா வருணி, பிக்பாஸ் வீட்டில் பாதுகாப்பாக விளையாடி வருபவர் அவர் தான். பிலாஸபியெல்லாம் பேசுகிறார்,  ஆனால் கவினுடன் கிராமத்து டாஸ்க்கில் அவர் வழிந்து கொண்டு தான் இருந்தார்.

-விளம்பரம்-

அது அவருடைய டாஸ்க் இல்லை என்றாலும் அவர் அதை தான் செய்து கொண்டிருந்தார். அவருடைய இரட்டை முகத்தை அவர் ஏற்கனவே காட்டத்துவங்கிவிட்டார் என்று கூறியுள்ளார். லாஸ்லியா குறித்து ஏற்கனவே முன்னாள் பிக் பாஸ் போட்டியாளர் ஒருவர் விமர்சித்து இருந்தார் என்பதும் குறிப்பிடத்தது.

Advertisement