பிக் பாஸின் 50 வது நாள் எபிசொட் – கமல் கொடுத்த இன்றைய டாஸ்க்.

0
732
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் ஒரு வாரத்தை நிறைவு செய்து தற்போது ஏழாவது வாரத்தை நிறைவு செய்ய இருக்கிறது. இந்த 7 வாரத்தில் பல டாஸ்க்குகள் நடைபெற்றது. அந்த வகையில் இந்த வாரம் மணிக்கூண்டு டாஸ்க் நடைபெற்று இருந்தது. நேற்றய நிகழ்ச்சியில் இந்த வாரம் போராக செயல்பட்ட இரண்டு நபர்களை தேர்ந்துதெடுக்கமாறு பிக் பாஸ் அறிவித்து இருந்தார். இதில் மணிக்கூண்டு டாஸ்கில் இறுதியாக வந்த அணியில் இருந்து தேர்ந்தெடுக்குமாறு கூறியிருந்தார். இதையடுத்து சுசித்ரா மற்றும் பாலாஜி இருவரும் கண்ணாடி அறைக்குள் அனுப்பப்பட்டனர்.

-விளம்பரம்-

அதே போல மணிக்கூண்டு டாஸ்க் முடிவின் போது இந்த டாஸ்கை குறைவான நேரத்தில் செய்து முடித்த அர்ச்சனா, சோம், சம்யுக்தா ஆகிய மூன்று பேரும் இந்த டாஸ்கில் சிறப்பாக செயல்பட்டதற்காக ஆரி, ரியோ, கேப்ரில்லா ஆகிய 3 பேரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். எனவே, இந்த 6 பேரும் அடுத்த வார தலைவர் பதவிக்கான டாஸ்கில் இடம் பெற்றனர்.இந்த டாஸ்கில் போட்டியாளர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டிருந்த ஒரு பெட்டியை பலகை மேல் நிற்க வைத்து பலகையை நீட்டி பிடித்து பின்னர் பஸ்ஸர் அடிக்கும் போதெல்லாம் ஒரு கோட்டியிலிருந்து இன்னொரு கோட்டிற்கு வரவேண்டும். இறுதிவரை அந்த பெட்டியை விழாமல் பிடித்திருப்பவர் வெற்றியாளர் என்று பிக்பாஸ் அறிவித்து இருந்தார்.

- Advertisement -

இந்த போட்டியில் இறுதி வரை ரியோ மற்றும் ஆரி விளையாடிக்கொண்டு இருக்க இறுதியில் இந்த டாஸ்கில் வெற்றி பெற்று ரியோ அடுத்த வார தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நேற்றய நிகழ்ச்சியில் இந்த வாரம் முழுவதும் நடந்த சில பிரச்சனைகள் குறித்து பஞ்சாயத்து செய்தார் கமல். அதே போல நேற்றய நிகழ்ச்சியில் இந்த வாரம் நாமினேஷனில் இடம்பெற்ற ரியோ மற்றும் ஆரி காப்பாற்றப்பட்டதாக அறிவித்து இருந்தார் கமல்.

இது ஒருபுறம் இருக்க இந்த வாரம் நடைபெற்ற நாமினேஷன் அடிப்படையில் ரியோ, பாலா, சம்யுக்தா, சோம், ஆரி, அனிதா, சுசித்ரா ஆகிய 7 பேர் நாமினேட் ஆகியுள்ளனர். இந்த வாரம் கண்டிப்பாக அனிதா அல்லது சுசித்ரா இருவரில் யாரவது வெளியேறுவார்கள் என்பது தான் பலரின் கணிப்பாக இருந்து வருகிறது. அதே போல இந்த வாரம் டபுள் ஏவிக்ஷன் கூட இருக்கலாம் என்று கூட எதிர்பரக்கப்படுகிறது.

-விளம்பரம்-
Advertisement