தன்னை பற்றி பதிவுகள் போட PR டீமிடம் லட்சங்களை கொடுத்து வந்துள்ள பிக் பாஸ் போட்டியாளர். வைரலாகும் வீடியோ.

0
607
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சிக்காக போட்டியாளர் ஒருவர் லட்சக்கணக்கில் செலவு செய்திருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கி மூன்றாவது வாரத்தின் இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் ஜிபி முத்து, அசீம், அசல், ராபர்ட், ராமசாமி, ஏடிகே, ஜனனி, அமுதவாணன், விஜே மஹேஸ்வரி, விஜே கதிரவன், ஆயிஷா, தனலட்சுமி, ரக்சிதா, மணிகண்டன், மெட்டி ஒலி சாந்தி, விக்ரமன், குயின்ஸி மற்றும் நிவாஷினி, சிவின் கணேசன் என 20 பேர் கலந்து கொண்டு இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

இந்த முறை நிகழ்ச்சியை ஒரே நேரத்தில் டிவியிலும், ஓடிடியிலும் ஒளிபரப்பாகி வருகிறது. பின் முதல் வாரத்திலேயே வைல்ட் கார்ட் எண்ட்ரியாக மைனா நந்தினி வந்து இருக்கிறார். இந்த முறை நிகழ்ச்சியை விறுவிறுப்பாக கொண்டு செல்ல பல மாற்றங்களை பிக் பாஸ் கொண்டு வந்து இருக்கிறது. இதனால் போட்டியாளர்கள் ஓவ்வொருவரும் சிறப்பாக விளையாடி வருகிறார்கள். மேலும், இந்த நிகழ்ச்சியில் அதிக ரசிகர் பட்டாளம் கொண்ட ஜிபி முத்து குடும்பத்தின் மீது இருந்த ஏக்கத்தின் காரணமாக தாமாகவே நிகழ்ச்சியை விட்டு வெளியேறி இருந்தார்.

- Advertisement -

பொம்மை டாஸ்க்:

இது பலருக்குமே அதிர்ச்சியை தந்திருந்தது. இவரை தொடர்ந்து கடந்த வாரம் முதல் எவிக்சன் நடந்தது. அதில் மெட்டிஒலி சாந்தி வெளியேறி இருந்தார். பின் வழக்கம் போல் மூன்றாவது வாரத்தில் பொம்மை டாஸ்க் கொடுக்கப்பட்டிருந்தது. இந்த டாஸ்க் கொடுத்தவுடன் போட்டியாளர்கள் மத்தியில் கலவரம் தொடங்கி இருந்தது. இந்த டாஸ்க் கொடுத்ததில் இருந்து அசீம் ஏற்கனவே இருந்ததை விட இன்னும் ஓவராக நடந்து கொண்டு இருந்தார்.

வீட்டில் அசீம் குறித்த சர்ச்சை:

மேலும், சில தினங்களுக்கு முன்பு போட்டியில் நிவாசினி கீழே விழுந்ததற்கு காரணம் தனலட்சுமி தான் என்று கடுமையாக திட்டி இருந்தார் அசீம் . இதற்கு தனலக்ஷ்மியும் பிக் பாஸ் சொல்லட்டும் என்று பொறுமையாக இருந்தார். இப்படி இந்த பொம்மை டாஸ்க் பயங்கர கலவரமாக சென்றிருந்தது. நேற்றைய எபிசோடு அட்டகாசமாக சென்றது. கமல், அசீமை வெளுத்து வாங்கி இருந்தார். அது மட்டும் இல்லாமல் தனலட்சுமி மீது எந்த தவறும் இல்லை என்றும் குறும்படம் போட்டு காண்பித்தார். பின் அசீம், நிவாஸினி உட்பட பலர் தனலட்சுமி இடம் மன்னிப்பு கேட்டு இருந்தார்கள்.

-விளம்பரம்-

மூன்றாவது வாரம் எவிக்ஷன்:

இதனை அடுத்து நாமினேஷன் பட்டியலில் உள்ள அசீம், அசல், மகேஸ்வரி ஆகியோரில் யார் இன்று வெளியே போகிறார்கள்? என்று எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்காக லட்சக்கணக்கில் செலவு செய்த போட்டியாளர் குறித்த தகவல் தற்போது வைரலாகி வருகிறது. அதாவது, இந்த சீசனில் முகம் தெரியாத பல நபர்கள் போட்டியாளர்களாக பங்கேற்று இருக்கிறார்கள். அதற்காக இவர்கள் பல லட்சம் ரூபாய் செலவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

லட்சக்கணக்கில் செலவு செய்த போட்டியாளர்:

அந்த வகையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்காக ராம் ராமசாமி 10 லட்சம் வரை செலவு செய்தார்
என்று பிறப்போட்டியார்கள் கூறியிருக்கிறார்கள். ஆனால், அவர் இல்லை என்று சொல்லி இருக்கிறார். அது மட்டும் இல்லாமல் அவர் 5 லட்சம் ரூபாயை விட குறைவாக தான் செலவு செய்திருப்பதாக ஒத்துக் கொண்டிருக்கிறார். ராம் ஒரு மாடல் ஆவார். பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பத்திலிருந்து இவர் பெண்களிடம் ஸ்வீட் ஆகவும், அமைதியாகவும் டீல் செய்து கொண்டு வருகிறார். அதிலும் மகேஸ்வரி விஷயத்தில் இவர் ரொம்ப அமைதி காத்து வருகிறார். இவர் லட்ச கணக்கில் செலவு செய்ததற்கு எத்தனை நாட்கள் நிகழ்ச்சியில் நீடிக்கப் போகிறார்? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Advertisement