தமிழில் விஜய் டிவியில் பிக் பாஸ் 7 நிகழ்ச்சி தொடங்கி 85 நாட்களை கடந்து இருக்கிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, சுரேஷ், ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள்.
இதுவரை இதில் பவா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்னபாரதி, பிரதீப், ஐஷு, கானா பாலா, அக்ஷயா, பிராவோ, ஜோவிகா, அன்னயா, கூல் சுரேஷ், சரவணா விக்ரம் ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர். தற்போது நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கி செல்வதால் அனல் பறந்து கொண்டு இருக்கிறது. மேலும், கடந்த வாரம் டிக்கெட் டு பினாலே டாஸ்க் கொடுக்கப்பட்டு இருந்தது. அதில் போட்டியாளர்கள் இரண்டு நபரை தேர்வு செய்து TTF போட்டியில் கலந்து கொள்ள வேண்டாம் என்று பிக் பாஸ் அறிவித்திருந்தார்.
பிக் பாஸ் 7:
அந்த வகையில் அனைவருமே சேர்ந்து அர்ச்சனா, விஜய் வர்மாவை தேர்ந்தெடுத்து இருந்தார்கள். கடந்த சில தினங்களுக்கு முன்னர் Ticket To Finaleவின் முதல் டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதில் மணி, விஷ்ணு, பூர்ணிமா ஆகிய மூவருக்கும் கடும் போட்டி நிலவியது. இதில் இறுதியாக விஷ்ணு வென்று மூன்று புள்ளிகளை பெற்றார். இதனால் மாயா மற்றும் பூர்ணிமா இருவரும் விஷ்ணு மீது கடும் காண்டில் இருந்தனர்.
எவிக்ட்டான ரவீனா :
இந்த வாரம் நடைபெற்ற நாமினேஷனில் தினேஷ், விஜய் வர்மா, விஷ்ணு, மாயா, நிக்சன், மணி, ரவீனா ஆகியோர் இடம்பெற்று இருக்கின்றனர். தற்போது பல தனியார் வலைத்தளங்களில் நடந்து வரும் ஓட்டிங்குகளில் மாயா, நிக்சன், ரவீனா ஆகிய மூவருக்கு தான் குறைவான வாக்குகள் பதிவாகி வருகிறது. இதில் கண்டிப்பாக மாயாவை வெளியேற்றமாட்டார்கள். அதனால் இந்த வாரம் நிக்சன் அல்லது ரவீனா வெளியேற அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில் ரவீனா எலிமினேட் ஆகி இருக்கிறார்.
ஆனால், இந்த வாரம் டபுள் ஏவிக்ஷனை அறிவித்து பெரிய ட்விஸ்டை கொடுத்துள்ளார் பிக் பாஸ். அந்த வகையில் தற்போதைய தகவலின்படி நிக்சன் வெளியேறி இருக்கிறார். ஆரம்பத்தில் நிக்சன் ஒழுங்காக தான் ஆடிவந்தார். ஆனால், அதன் பின்னர் ஐசுவுடன் சேர்ந்து இவர் செய்த சேட்டைகள் இவர் மீது வெறுப்பை உள்ளாக்கியது. அதிலும் கடந்த சில தினங்களாக அக்கா என்று சொல்லிக்கொண்டு வந்த பூர்ணிமாவுடன் இவர் செய்யும் விஷயங்கள் பலரை முகம் சுழிக்க வைத்து வருகிறது.
காப்பாற்றப்பட்ட மாயா :
நிக்சன் வெளியேறியதை சமூக வலைதளத்தில் பலர் கொண்டாடி வந்தாலும் மாயா காப்பாற்றப்பட்டு இருப்பதை நினைத்து பலர் புலம்பிகொண்டு தான் வருகின்றனர். இனி இன்னும் கொஞ்ச வாரங்களே எஞ்சி இருக்கும் நிலையில் மணி, விஜய் வர்மா ஆகியோர் வெளியேற தான் அதிக வாய்ப்பு இருக்கிறது. எனவே கண்டிப்பாக மாயா இறுதி போட்டி வரை சென்றாலும் ஆச்சரியப்படுவதர்க்கு இல்லை.