ஒருத்தர் வெளிய போகறப்ப இப்படியா பண்ணுவீங்க, அர்ச்சனா கேட்ட நச் கேள்வி, மாயாவின் பதில்.

0
616
- Advertisement -

தமிழில் விஜய் டிவியில் பிக் பாஸ் 7 நிகழ்ச்சி தொடங்கி 84 நாட்களை கடந்து இருக்கிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, சுரேஷ், ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள்.

-விளம்பரம்-

இதுவரை இதில் பவா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்னபாரதி, பிரதீப், ஐஷு, கானா பாலா, அக்ஷயா, பிராவோ, ஜோவிகா, அன்னயா, கூல் சுரேஷ் ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர். இந்த வாரம் கேப்டன் யாரும் இல்லை. இதனால் போட்டியாளர்கள் குஷி ஆகி விட்டார்கள். அனைவரும் எதிர்பார்த்த ப்ரீஸ் டாஸ்க் இந்த வாரம் நடைபெற்றது. இதில் போட்டியாளர்களின் ஒவ்வொரு உறவினர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்தார்கள். இதனால் பிக் பாஸ் வீடே எமோஷனல் ஆகி இருக்கிறது.

- Advertisement -

பிக் பாஸ் வீட்டில் ப்ரீஸ் டாஸ்க்:

மணி உடைய பெற்றோர்கள் பிக் பாஸ் வீட்டிற்கு வந்திருக்கிறார்கள். அதன் பின் தினேஷ் அம்மா, அப்பா வருகிறார்கள்.இதனை அடுத்து விஷ்ணு அம்மா, அர்ச்சனா அம்மா, அப்பா வருகிறார்கள். பின் நேற்று நிகழ்ச்சியில் ரவீனாவின் உறவினர்கள் வந்திருக்கிறார்கள். அவர்கள் வெளியில் நடந்து கொண்டிருப்பதை கோட்வோர்டில் சொல்லி இருக்கிறார்கள். இதனால் விதியை மீறி இவர்கள் இருவரும் சொல்லியதால் பிக் பாஸ் அவர்களை உடனடியாகவே வெளியில் அனுப்பி விட்டார்கள்.

விக்ரம் தங்கை சொன்னது:

அதற்குப்பின் மாயாவின் அம்மா, விசித்திரா குடும்பம், நிக்சன் நண்பர், விஜய் வர்மா உறவினர் ஆகியோர் வந்து இருக்கிறார்கள். இதனை அடுத்து விக்ரமின் அம்மா, அப்பா, தங்கை பிக் பாஸ் வீட்டிற்கு வந்திருக்கிறார்கள். விக்ரமனை கூட்டிக்கொண்டு தனியாக அவர் தங்கை அறிவுரை கூறியிருக்கிறார். அதோடு உறவினர்களும் தங்களால் முடிந்தவரை ஹிண்ட் எல்லாம் கொடுத்து இருந்தார்கள். குறிப்பாக, சரவணன் தங்கை மாயா- பூர்ணிமா உனக்கு முன் ஒன்று சொல்லி உன் முதுகுக்குப் பின்னால் வேறு ஒன்று சொல்கிறார்கள்.

-விளம்பரம்-

வெளியேறிய சரவண விக்ரம்:

அவர்களிடம் பேசுவதை நிறுத்திக்கொள் என்று சொன்னவுடன் விக்ரமும் அவர்களிடம் பேசுவதை நிறுத்திக் கொண்டார்.இப்படி இருக்கும் நிலையில் இந்த வாரம் விசித்ரா, ரவீனா, சரவண விக்ரம் ஆகியோர் நாமினேட் ஆகி இருந்தார்கள். இதில் குறைந்த வாக்குகளை பெற்று இந்த வாரம் சரவணன் விக்ரம் வெளியேறி இருக்கிறார்.இவர் நிகழ்ச்சி தொடக்கத்திலிருந்து பெரிதாக எந்த ஒரு விஷயத்திலுமே ஈடுபாடுடன் செய்யவில்லை.

இன்றய ப்ரோமோ :

இப்படி ஒரு நிலையில் இந்த வார நாமினேஷன் முடிந்துள்ளது. அதில் விஷ்ணு, மாயா, ரவீனா, மணி, நிக்சன், தினேஷ்ஆகியோர் நாமினேட் ஆகி இருக்கின்றனர். இந்த லிஸ்டில் ரவீனா இருப்பதால் இந்த வாரமும் நிக்சன் காப்பாற்றப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படி ஒரு நிலையில் நேற்று விக்ரம் வெளியேறிய போது மாயா நடந்துகொண்ட விதம் பற்றி அர்ச்சனா பேசியதற்கு மாயா கடுப்பாகி இருக்கிறார்.

Advertisement