""
-விளம்பரம்-
Home பிக் பாஸ்

டாப்பில் சென்ற விசித்ரா, காப்பாற்றப்பட்டாரா டைட்டில் வின்னர் சரவணன்? – பிக் பாஸில் இருந்து இந்த வாரம் வெளியேறியது யார் தெரியுமா?

0
107
-விளம்பரம்-

தமிழில் பிக் பாஸ் 7 நிகழ்ச்சி தொடங்கி 48 நாட்களை கடந்து இருக்கிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப், பூர்ணிமா, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள். மேலும், முதல் நாளில் இருந்தே நிகழ்ச்சி அனல் பறந்து கொண்டு இருக்கிறது.

-விளம்பரம்-

அதேபோல் நிகழ்ச்சியில் இருந்து இதுவரை அனன்யா, பவா, விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்னபாரதி, ஐஷு ஆகியோர் வெளியேறி இருக்கிறார்கள். அதோடு போன வாரம் பிரதீப் Red Card கொடுத்து வெளியேற்றப்பட்டார். காரணம், பிரதீப்பால் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று வீட்டில் இருந்த பெரும்பாலான பெண்கள் கமலிடம் முறையிட்டததால் அவரை வீட்டில் இருந்து வெளியேற்றினார் கமல். ஆனால், இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள்.

பிக் பாஸ் 7:

அதோடு இதற்கு முழு காரணம் மாயா,பூர்ணிமா, ஜோவிகா, ஐஷு என்று கூறப்படுகிறது. மேலும், பிரதீப் தரப்பில் இருந்து எந்த ஒரு வாதத்தையும் கேட்காமல் இருந்து கமலஹாசன் வெளியேற்றியது ரொம்ப தவறு என்று சோசியல் மீடியாவில் நெட்டிசன்கள் கடுமையான விமர்சனங்களை கொடுத்திருந்தார்கள். இந்த வாரம் பிக் பாஸ் வீட்டிற்கு கேப்டனாக தினேஷ் தேர்வு செய்யப்பட்டார். பின் இந்த வாரம் பிக் பாஸ்- ஸ்மால் பாஸ் என்ற பிரிவு கிடையாது. இந்த வாரம் எல்லாம் ஒரே பிக் பாஸ் வீடுதான் என்று பிக் பாஸ் அறிவித்திருந்தார்.

தினேஷ் -விஷ்ணு சண்டை:

-விளம்பரம்-

இது போட்டியாளர்கள் மத்தியில் சந்தோஷத்தை அளித்திருக்கிறது. ஆனால், சில பேருக்கு வருத்தம் என்று சொல்லலாம். பின் வீட்டில் வேலை செய்வதற்கு அணிகளை கேப்டன் ஆன தினேஷ் தேர்வு செய்திருந்தார். வழக்கம்போல் போட்டியாளர்கள் மத்தியில் சலசலப்பு சர்ச்சைகள் நடந்து கொண்டுதான் இருந்தது. குறிப்பாக, தினேஷ் விஷ்ணு சண்டைதான் பூதாகரமாக வெடித்தது. விஷ்ணு தினேஷை நரி என்று கூற, விஷ்ணுவை கண்டன்ட் பொறுக்கி, அமுல் பேபி என்று தினேஷ் கூறி இருக்கிறார்.

-விளம்பரம்-

நாமினேஷன் பட்டியல் :

இதனால் கடுப்பான விஷ்ணு சேரை எட்டி உதைத்து இந்த மிதி உனக்கு தான் என்று கூறியிருக்கிறார். இப்படி இந்த வாரம் முழுவதும் இவர்கள் இருவருக்கும் நடந்த சர்ச்சை தான் பூதாகரமாக வெடித்தது. இந்நிலையில் இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறருக்கும் நபர் குறித்த தகவல் தான் வெளியாகி இருக்கிறது. இந்த வாரத்திற்கான நாமினேஷன் பட்டியலில் சரவணா விக்ரம், பூர்ணிமா, ரவீனா, மணி, பிராவோ, அக்ஷயா, கானா பாலா ஆகியோர் பெயர் இடம் பெற்று இருக்கிறது.

வெளியேறிய நபர்:

இதில் மிக்சர் போட்டியாளராக இருந்த அக்ஷயா, பிராவோ, விக்ரமில் இருந்து தான் யாராவது ஒருவர் வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், குறைந்த வாக்குகளின் அடிப்படையில் கானா பாலா வெளியேறுகிறார், அது மட்டும் இல்லாமல் இவர் நிகழ்ச்சியில் நுழைந்த நாளில் இருந்து பெரிதாக எந்த ஒரு சர்ச்சையிலும், சுவாரசியத்தையும் கொடுக்கவில்லை. இதனால் தான் இவர் வெளியேறுகிறார் என்று கூறப்படுகிறது

-விளம்பரம்-

Follow Us at Google News : அனைத்து சினிமா செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் என்பதை கிளிக் செய்யவும்.

Google news