பிக் பாஸ் 2 நிகழ்ச்சி தொடங்கி 2 நாட்கள் தான் ஆகிறது அதற்குள்ளாக அந்த நிகழ்ச்சி சம்மந்தபட்ட பல மீம்கள் சமூக வலைதளத்தில் பரவ தொடங்கி விட்டது. இதில் குறிப்பாக யாசகா அனந்த் தான் படு ட்ரெண்டிங் டெம்ப்ளெட்.
இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்த பிறகு இவருக்கு எக்கச்சக்க ரசிகர்கள் குவிந்து விட்டனர். கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் 1 இல் போட்டியாளராக பங்குபெற்ற ஓவியா போலவே இவருக்கும் இப்போதே யாஷிகா ஆர்மி என்று ஒரு குரூப் கிளம்பியுள்ளது. ஆனால், இவர் ஓவியா பெற்ற புகழை பெற மாட்டார் என்று ஓவியா ஆர்மியில் இருக்கும் பலரும் கூறிவருகின்றனர்.
அதற்கு ஏற்றார் போல தான் இவரும் பிக் பாஸ் வீட்டினுள் நடந்து வருகிறார். சுட்டி தனமாக செய்வதாக என்ணி மற்ற போட்டியாளர்களை எரிச்சலூட்டி வருகிறார். முதல் நாளான அன்று காலை 11 மணி வரை அம்மணி பேட்டில் இழுத்து போத்திக் கொண்டு தூங்கி கொன்றிருந்தார். அவரை சக போட்டியாளர்களான ஜனனி ஐயரும், ரம்யாவும் ’11 மணி ஆகிடிச்சி இன்னும் குளிக்காம இருக்க ‘ என்று கேட்டுள்ளனர்.
அதற்கு படுத்துக் கொண்டவாறே பதில் பேசிய யாஷிகா,’ எனக்கு போர் அடிக்கலான தான் குளிப்பேன், இல்லனா குளிக்க மாட்டேன். ஒரு சில சமயம் நான் குளிக்காம கூட இருப்பேன்’என்று கூறியுள்ளார். இதற்கு ரம்யா ‘ஏன் தண்ணிய மிச்சப்படுத்த போரயா’என்று அவரை கிண்டல் அடித்தார். இதனால் யாஷிக ஆனந்தை சமூக வலைதங்களில் எம் சி க்கள் மீம் போட்டு கிழித்தெடுத்து வருகின்றனர்.
பிக் பாஸ் போட்டியாளர்கள் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறாமல் இருக்க அவர்களுக்கு மக்களாகிய நீங்கள் வாக்கு அளிக்க வேண்டும் என்று நினைத்தால் “Bigg Boss Vote Tamil” என்ற இணைய பக்கத்திற்கு சென்று உங்களது வாக்குகளை செலுத்தி உங்களின் விருப்பமான போட்டியாளரை எலிமினேஷனில் இருந்து காப்பாற்றலாம்.