இவர் ரொம்ப நல்லவர்..இவருக்குதான் என் ஆதரவு.! இவர்தான் பிக் பாஸ் வின்னர்.! ஸ்ரீ ரெட்டி அதிரடி

0
331
sri-Reddysri-Reddy

தமிழில் தற்போது ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி தெலுகு. மலையாளம் என்று பல்வேறு மொழிகளிலும் நடைபெற்று வருகிறது. இதில் தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியை பிரபல தெலுங்கு திரைப்பட நடிகர் நானி தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்த நிகழ்ச்சியில் பிரபல தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டியும் கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கபட்டது. ஆனால், ஸ்ரீ ரெட்டிக்கும் நானி குறித்து சில சர்ச்சையான விடயங்களை வெளியிட்டதால் ஸ்ரீரெட்டி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் நான் வரமாட்டேன் என்று நடிகர் நாணி கூறியதால் ஸ்ரீரெட்டி தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற முடியாமல் போனது.

இருப்பினும் தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியை நடிகை ஸ்ரீரெட்டி தொடர்ந்து பார்த்து வருகிறார் என்று தான் தெரிகிறது. ஏனெனில் சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் “கௌஷல் மிகவும் நல்ல மனிதர். நான் கௌஷல் ஆர்மியை ஆதரிக்கிறேன். தெலுங்கு பிக் பாஸ் பட்டதை அவர் தான் வெல்வார் என்று நான் நம்புகிறேன் ” என்று பதிவிட்டுள்ளார்.

bigg boss kaushal

kaushal

ஸ்ரீரெட்டி குறிப்பிட்டுள்ள கௌஷல் என்பவருக்கு தான் தெலுகு ரசிகர்களின் முழு ஆதரவும் இருந்து வருகிறது. கௌஷல் ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார், அதுபோக தொலைக்காட்சி சீரியல்கள், ரீயாலிட்டி நிகழ்ச்சிகள் போன்றவற்றில் பங்குபெற்று தெலுகு ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.