கடந்த ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வெற்றிகரகமாக முடிவடைந்த பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தர்ஷன். இவர் இலங்கையை சேர்ந்தவர். இவர் மாடலிங் செய்து கொண்டும், விளம்பர படங்களில் நடித்து கொண்டும் வருகிறார். மாடலும், நடிகருமான தர்ஷன் தான் பிக்பாஸ் பட்டத்தை வெல்வார் என்று அனைவரும் எதிர்பார்த்து கொண்டு இருந்தார்கள். ஆனால், இவர் திடீரென்று போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியைத் தந்தது. மேலும், தர்ஷன் அவர்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்த போது நடிகை சனம் ஷெட்டியை தான் காதலிக்கிறேன் என்று அடிக்கடி கூறி இருந்தார். இது அனைவருக்கும் தெரிந்ததே.
தர்சன் இலங்கையில் மாடலிங் செய்து கொண்டிருக்கும் போதே மாடல் அழகியும், நடிகையுமான சனம் ஷெட்டியினை காதலித்து வந்து உள்ளார். பின் இவர்கள் இருவரும் நிச்சயதார்த்தம் செய்து உள்ளார்கள். அதற்கு பிறகு தான் தர்ஷன் அவர்கள் தமிழில் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சிக்கு சென்று உள்ளார் என்று தெரிய வந்து உள்ளது. தற்போது தர்சன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வந்த உடன் திருமணம் செய்து கொள்ள மறுக்கிறார் என்றும், தர்சனுக்காக 15 லட்சம் வரை பண உதவி செய்திருப்பதாகவும் நடிகை சனம் ஷெட்டி அவர்கள் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். இந்த விஷயம் ரசிகர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இதனை தொடர்ந்து தர்ஷன் அவர்கள் பத்திரிக்கையாளர் சந்திப்பில் சனம் ஷெட்டி குற்றம் சாட்டிற்கு பதிலளித்து இருந்தார்.
இதையும் பாருங்க : ஹீரோவாகும் மன்சூர் அலிகான். அதிரடியாக உடலை குறைத்துள்ளாராம்.
அதில் அவர் கூறி இருந்தது, நாங்கள் நிச்சயதார்த்தம் செய்து கொண்டது உண்மை தான். ஆனால், அதை மறைக்க சொன்னது சனம் ஷெட்டி தான். சனம் ஷெட்டி எனக்கு 15 லட்சம் வரை பண உதவி செய்து உள்ளதாக கூறியிருந்தார். ஆனால், நான் என்னுடைய Tax பிரச்சனைக்காக ஒரு 3.5 லட்சத்தை வாங்கியிருந்தேன். அதையும் நான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்தவுடன் கொடுத்து விட்டேன். அதேபோல எங்களின் நிச்சயதார்த்தத்தின் போது ஒரு 2.5 லட்சம் செலவானது அதை மட்டும் தான் நான் இன்னும் கொடுக்கவில்லை. சனம் பிகினியில் அளித்த பேட்டி எனக்கு பிடிக்கவில்லை. மேலும், அவருக்கு முன்னாள் காதலருடன் தொடர்பு இருக்கிறது என்றும் கூறினார் தர்ஷன்.இப்படி இருவரும் மாற்றி மாற்றி ஒருவரை ஒருவர் குறை சொல்லிக் கொண்டே வந்திருந்தார்கள்.
இந்த நிலையில் இந்த பிரச்சினை குறித்து பிக்பாஸ் புகழ் நடிகை காஜல் பசுபதி ட்விட்டரில் கருத்து ஒன்று பதிவிட்டு உள்ளார். அதில் அவர் கூறியது,தர்ஷன் மீது தவறு இருக்கிறது தான் அதை நான் முழுமையாக ஒப்புக் கொள்கிறேன் ஆனால் உங்களுடைய நோக்கம் என்ன என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை உங்களுக்கு தர்ஷன் மீண்டும் உங்களிடம் வர வேண்டுமா அல்லது அவர் அனுபவிக்க வேண்டுமா காதலித்தவர்கள் கஷ்டப்படுவதை எந்த ஒரு காதலியும் விரும்பமாட்டார்கள் இதை நீங்கள் புரிந்து கொள்வேன் என்று நம்புகிறேன் என்று பதிவிட்டிருந்தார்.
மேலும் நான் அனைத்து பேட்டிகளையும் பார்த்தேன். சனம் ஷெட்டி மிகுந்த ஆதரவாகத்தான் இருந்து வந்துள்ளார். ஆனால், பிக் பாஸுக்கு பின்னர் அவரை கண்டு கொள்ளாமல் இருந்திருக்கிறார். ஆனால், ஒரு நடுத்தர குடும்பத்தில் இருந்த வந்தவராக பிகினியில் பேட்டி கொடுத்தது தான் அவர் விரும்பவில்லை. அதுவும் அவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்த பிறகு. இதை கொஞ்சம் யோசிக்க வேண்டும். இதை யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இரண்டு பேர் மீதும் தவறு இருக்கிறது என்று பதிவிட்டுள்ளார் காஜல்.