தர்ஷனிடம் பேச முயன்ற போது அபிராமி சொன்னதை என்னால் மறக்க முடியல- மனம் வருந்திய சனம் ஷெட்டி.

0
60384
abhirami-tharshan
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் கலந்துகொண்ட தர்ஷன் மீது மாடல் அழகியும் நடிகையுமான சனம் ஷெட்டி கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் தான் தற்போது பிக்பாஸ் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது கடந்த ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய பிரபலமடைந்தவர் மாடலும் நடிகருமான தர்ஷன் பிக்பாஸ் பட்டத்தை வெல்வார் என்று ரசிகர்களும் சக போட்டியாளர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில் எதிர்பாராத விதமாக தர்ஷன் வெளியேறியது பலருக்கும் அதிர்ச்சியைத் தந்தது.

-விளம்பரம்-

மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தர்ஷன் இருந்தபோது நடிகை சனம் ஷெட்டி தான் தான் தர்ஷன் இன் காதலி என்று அடிக்கடி கூறி வந்தார். அதேபோலத் தர்ஷனுக்கு ஆதரவாக பல்வேறு வீடியோக்களையும் பதிவிட்டு வந்தார். ஆனால், தர்ஷன் ஷெரினுடன் நெருக்கமாக இருந்ததை கண்ட சனம் ஷெட்டி இனி தர்ஷன் வாழ்வில் தான் குறுக்கிட மாட்டேன் என்று அழுதபடி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்தநிலையில் தர்ஷனுக்கும் தமக்கும் நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாக நேற்று புதிய குண்டை தூக்கிப் போட்டு நிச்சயதார்த்தத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் வீடியோக்களையும் பகிர்ந்து இருந்தார் சனம் ஷெட்டி.

- Advertisement -

மேலும் தர்ஷன் தன்மை ஏமாற்றிவிட்டதாக சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார் நடிகை சனம் ஷெட்டி பிக்பாஸ் நிகழ்ச்சியில் பெரிதும் விரும்பப்பட்ட தர்ஷனா இப்படி ஒரு பெண்ணை காதலித்து ஏமாற்றி விட்டார் என்று புலம்பி வருகிறார். இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற சனம் ஷெட்டி,ஒருமுறை தர்ஷன் மலேசியாவில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சிக்காக சென்றிருந்தார் அந்த நிகழ்ச்சிக்கு என்னையும் அழைத்திருந்தனர் நானும் சென்று இருந்தேன் அப்போது தர்ஷன் மற்றும் அபிராமி இருவரும் விமானத்தில் வந்து கொண்டிருந்தபோது தர்ஷனிடம் நான் பேச முயன்றேன்.

வீடியோவில் 23 நிமிடத்திற்கு பின் பார்க்கவும்.

-விளம்பரம்-


ஆனால, அபிராமி தர்ஷனிடம் நான் பேச முயன்றபோது என்னை விடவே இல்லை. அவனை ஏன் டார்ச்சர் செய்கிறாய் என்ற அளவிற்கு என்னைக் கேட்டு விட்டால். அவர்கள் இருவரும் நன்றாக பேசிக்கொண்டு இருந்தார்கள். ஆனால், நான் சென்ற உடனே நான் தர்ஷனுடன் பேசக்கூடாது என்பது போல அவர் நடந்துகொண்டார். ஆனால், அப்போதும் நான் அபிராமியிடம் கேட்டேன் ‘நான் உன்னை ஒரு தோழியாக நினைத்தேன், நீ உதவி செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை. ஆனால், அவரிடம் பேசாமல் என்னை தடுப்பது தவறு இல்லையா? என்று கேட்டேன். அதற்கு அபிராமியும் உனக்கு மனநலம் சரியில்லை அதனால் நீ ஒரு மருத்துவரை போய் பார். அதன் பின்னர் வந்து அவனிடம் பேசு என்று சொன்ன அந்த வார்த்தை என்னால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. ஆனால், அவளுக்கு உண்மை என்பது என்ன என்று தெரியும் என்று மிகவும் மனவேதனையுடன் கூறியிருக்கிறார்.

Advertisement