அந்த வார்த்தையை இனி சொன்னால் அசிங்கமா சொல்லிடுவேன்.! லாஸ்லியாவை திட்டிய தர்ஷன்.!

0
13173
tharshan-losliya

பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளதால் போட்டியாளர்கள் மத்தியில் போட்டித்தன்மை வெளியில் எட்டி பார்த்து உள்ளது. அதிலும் கடந்த வாரம் நடைபெற்ற பினாலே டாஸ்கின் போது போட்டியாளர்கள் மத்தியில் கொஞ்சம் முட்டிக்கொண்டது. அந்த வகையில் கடந்த சில நாட்களாக தர்ஷன் மற்றும் கவிலியா இருவருக்கும் ஒரு தனிப்பட்ட மோதல் இருந்து கொண்டு வருகிறது.

losliya

நேற்றய நிகழ்ச்சியில் வழக்கம் போல கவின் மற்றும் லாஸ்லியா தனியாக அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது தர்ஷன் குறித்து பேசிய லாஸ்லியா, என்னை தர்ஷன் திட்டிவிட்டான் என்று கவினிடம் கூற, அதற்கு ஏன் என்று கவின் கேட்டார். அதற்கு , தர்ஷனை நான் ‘தர்மர்’ என்று கூப்பிட்டேன், அதற்கு அவன், இன்னொரு முறை அப்படி கூப்பிட்டால் எதாவது அசிங்கமாக சொல்லிவிடுவேன் என்று திட்டிவிட்டான் என்று கூறினார் லாஸ்லியா.

- Advertisement -

அதற்க்கு கவின், அவன் தான் அந்த வார்த்தையை சொன்னால் கடுப்பாகிறான் என்று தெரிகிறதே அப்போது ஏன் அந்த வார்த்தையை கூறினாய் என்று சொன்னார்.சாண்டி அண்ணன் கூட அப்படி கூப்பிட்டார். ஆனால், அந்த வார்த்தையை சொன்னால் அவன் கடுப்பாகிறான் என்று தெரிந்ததும் அவர் அதன் பின்னர் அப்படி கூப்பிடுவதை நிறுத்திவிட்டார் என்று சொன்னார்.

கடந்த சில நாட்களகவே தர்ஷனுக்கு கவின் மற்றும் லாஸ்லியா மீது ஒரு தனிப்பட்ட கோபம் இருந்து வருகிறது. கடந்த வாரம் நடைபெற்ற பினாலே டாஸ்கின் போது கவின் மற்றும் லாஸ்லியா ஒருவருக்கு ஒருவர் விட்டு கொடுத்து ஆடுகிறார் என்று கூறியிருந்தார். ,மேலும், கவின், ஷெரீனை மட்டும் டார்கெட் செய்வதாகவும் கூறியிருந்தார் தர்ஷன்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.