என் கன்டன்ட புழிந்து அப்புறம் வெளிய தூக்கி எரிஞ்சிடுரீங்க – சர்ச்சை பதிவிற்கு சுரேஷ் சக்ரவர்த்தி கொடுத்த விளக்கம்.

0
327
suresh
- Advertisement -

தமிழில் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தொடங்கி ஒரு வாரத்தை கடந்து உள்ளது. அதுவும் விஜய் டிவி புதிய கதைக்களத்துடன் இந்த நிகழ்ச்சியை அறிமுகப்படுத்தி உள்ளது. தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் வேறு. இந்த பிக் பாஸ் வேறு. இந்தியில் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி Ottயில் ஒளிபரப்பானது. தற்போது இதே கான்சப்டில் தமிழில் டிஸ்னி ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சி டிவி ஷோ போல் ஒரு மணி நேரம் இல்லாமல் 24 மணி நேரமும் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பி வருகிறார்கள். இதில் பிக் பாஸ் சீசன் 1முதல் 5 வரையிலான போட்டியாளர்கள் கலந்து கொண்டு இருக்கின்றனர். மேலும், கடந்த 2 சீசன்களை போல போட்டியாளர்கள் அனைவரும் கொரோனா தொற்று கட்டுப்பாடுகளுடன் போட்டியாளர்கள் இரண்டு தடுப்பூசி செலுத்தப்பட்டு தனிமைப்படத்தப்பட்ட பின்னரே பிக் பாஸ் வீட்டிற்குள் அனுப்பி வைக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-

மேலும், இந்த நிகழ்ச்சியில் வனிதா, சினேகன், அபிராமி, சுஜா வருணி, அபிநய், அனிதா, பாலாஜி முருகதாஸ், தாடி பாலாஜி, சுருதி, தாமரை செல்வி, ஷாரிக், நிரூப், சுருதி, தாமரை, சுரேஷ் ஷாரிக், நிரூப் ஆகிய 14 பேர் கலந்து கொண்டனர். முதல் நாளே அல்டிமேட் நிகழ்ச்சியில் அபிராமி புகை பிடிக்கும் வீடியோ, வனிதா குழாய் அடி சண்டை, நிரூப் முன்னாள் காதல் என்று சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை கிளப்பி இருந்தது. அதோடு பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தொடங்கியதிலிருந்தே போட்டியாளர்களுக்குள் வன்மம் கலவரம் தொடங்கி விட்டது.

- Advertisement -

பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் நாமினேட்:

இதனால் பயங்கரமாக ஒருவரை ஒருவர் தாக்கி பேசி வருகிறார்கள். அதிலும் வனிதா எல்லோரையும் கொளுத்தி போட்டு வருகிறார். கடந்த வாரம் அல்டிமேட் நிகழ்ச்சியில் முதல் நாளே போட்டியாளர்கள் நாமினேட் செய்யப்பட்டு இருந்தார்கள். இதில் வனிதா, ஜூலி, சுரேஷ் சக்கரவர்த்தி, அபிநய், சுருதி, சினேகன், அனிதா, நிரூப் ஆகிய எட்டு பேர் வெளியேறுவதற்காக நாமினேஷன் பட்டியலில் இருந்தனர். அதில் இருந்து முதலில் சுரேஷ் சக்கரவர்த்தி எலிமினேட் ஆகி இருக்கிறார். ஆனால், அடுத்த வாரம் முழுவதும் வீட்டில் கேப்டனாக இருக்க நடந்த போட்டியில் சுரேஷ் சக்ரவர்த்தி இருக்க வெற்றி பெற்றார்.

சுரேஷ் சக்ரவர்த்தி எலிமினேட்:

இதனால் கேப்டன் பதவியை சினேகனுக்கு கொடுத்துவிட்டு சுரேஷ் சக்ரவர்த்தி சென்றிருக்கிறார். சுரேஷ் சக்ரவர்த்தி பிக் பாஸ் சீசன் 4ல் கலந்து கொண்டவர். தற்போது மீண்டும் அல்டிமேட்டில் நிகழ்ச்சியில் சுரேஷ் சக்கரவர்த்தி விளையாட்டை பலரும் எதிர்பார்த்தார்கள். மேலும், முதல் வார நாமினேஷனில் அதிக வாக்கு எடுத்து அபிநய் பெயரும் இருந்தது. அதனால் அதிகம் அபிநய் தான் வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அபிநய் காப்பாற்றப்பட்டு சுரேஷ் சக்ரவர்த்தி வெளியேறியது பலரும் எதிர்பார்க்காத ஒன்று.

-விளம்பரம்-

சுரேஷ் சக்ரவர்த்தி போலி கணக்கு டீவ்ட்:

கமல் சொல்வது போல் எதிர்பாராததை எதிர் பாருங்கள் என்பது நடந்தது என்று தான் சொல்லணும். மேலும், நிகழ்ச்சியிலிருந்து சுரேஷ் சக்ரவர்த்தி வெளியேறிய பிறகு அவருடைய டீவ்ட் ஒன்று சோஷியல் மீடியாவில் வைரலாகி இருந்தது. அதில் அவர், மீண்டும் நான் வெளியேற்றப்பட்டு விட்டேன். என்னை விட அபிநய் அதிக வாக்குகளை வாங்கி விட்டாரா ? நீங்கள் என்னிடம் இருந்து கன்டன்டை பிழிந்துகொண்டு என்னை தூக்கி எரிந்து விடுகிறீர்கள் என்று குறிப்பிட்டதோடு பாலாஜி முருகதாஸ் மற்றும் ஜூலியின் பெயரும் குறிப்பிடப்பட்டு இருந்தது.

சுரேஷ் சக்ரவர்த்தி விளக்கம் அளித்த டீவ்ட்:

இப்படி இவர் பதிவிட்ட டீவ்ட் சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி இருந்தது. இந்நிலையில் இதற்கு விளக்கம் கொடுக்கும் வகையில் சுரேஷ் சக்ரவர்த்தி பதிவு ஒன்றை போட்டு இருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது, இது என்னுடைய பதிவு கிடையாது. இது போலியான கணக்கு மூலம் போடப்பட்டது. இது நான் பதிவிடவில்லை. இதை பதிவிட்டவர்கள் மீது நான் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பேன் என்று கூறியிருக்கிறார். தற்போது சுரேஷ் சக்ரவர்த்தி விளக்கம் அளித்த டீவ்ட் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement