புதிய ஹேர் ஸ்டைல் கிண்டலுக்கு உள்ளாகி வரும் நிலையில் புதிய கெட்டபிற்கு மாறிய வைஷ்ணவி.!

0
468
Vaishnavi

பிக் பாஸ் முதல் சீசனில் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்தது ஓவியா தான். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் ஓவியா வைத்த ஹேர் ஸ்டைல் பெரும் பிரபல மடைந்தது.இந்நிலையில் இதே ஹேர் ஸ்டைலை வைத்து புதிய கெட்டப்பிற்கு மாறியுள்ளார் வைஷ்ணவி.

பிக் பாஸ் சீசன் இரண்டில் புறம் பேசும் வைஷ்ணவியை மட்டுமே மக்கள் அறிந்திருக்க வாய்ப்புண்டு, ஆனால், இவர் பிரபல எப் எம் சேனலில் வர்ணனையாளராக பணியாற்றி வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. சென்னையை சேர்ந்த இவருக்கு இரண்டு சகோதரரும் உள்ளனர்.

சமீபத்தில் வைஷ்ணவி நீச்சல் குளத்தில் பிகினி உடையில் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலானது. அதனை ரசிகர்களும் வறுத்தெடுத்தனர். இருப்பினும் தனது வேலையை தொடர்ந்து வருகிறார் வைஷ்ணவி.

இந்நிலையில் உதட்டில் நீல லிப் ஸ்டிக், தலையில் நீல நிற டை என்று ஆளே மாறியுள்ளார் வைஷ்ணவி. ஏற்கனவே இவர் வைத்துள்ள புதிய ஹேர் ஸ்டைல் ரசிகர்கள் மத்தியில் கேலி கிண்டலுக்கு உள்ளாகியுள்ள நிலையில் தற்போது வைஷ்ணவியின் இந்த புதிய கெட்டப்பையும் வலைதளவாசிகள் வறுத்தெடுத்து வருகின்றனர்.