பிக் பாஸ் நிகழ்ச்சியின் இந்த சீசனில் வனிதா இருந்தவரை ஸ்வாரசியத்திற்கும் சர்ச்சைக்கும் பஞ்சமே இல்லாமல் இருந்தது. என்னதான் இவர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினாலும் ரசிகர்கள் பலரும் இவரை வைல்ட் கார்ட் என்ட்ரியில் எதிர்பார்த்து வருகின்றனர்.
https://twitter.com/vanithavijayku1/status/1155849401631301639
அதே போல பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய வனிதா பல்வேறு போட்டிகளில் பங்கேற்று மற்ற போட்டியாளர்கள் குறித்து பல ரகசியங்களை கூறி வருகிறார். இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள சரவணனை விரைவில் வெளியேற்றுமாறு வனிதா ட்வீட் செய்துள்ளார்.
இதையும் பாருங்க : யார் யாரை நாமினேட் செய்தார்கள்.! இது தான் இந்த வார நாமினேஷன் லிஸ்ட்.!
இதற்கு முக்கிய காரணமே கடந்த சில நாட்களுக்கு முன்னர் சேரன் விஷயத்தில் பொய் சொன்ன மீராவிற்காக குறும்படம் ஒன்று ஒளிபரப்பபட்டது. அந்த குறும்படம் மூலம் சேரன் எந்த தவறும் செய்யவில்லை என்பதை உறுதி செய்தார் கமல். மேலும், மீராவிற்கு அறிவுரை வழங்கிய கமல், நீங்கள் இப்படியெல்லாம் குற்றச்சாட்டுகளை எல்லாம் வைத்தால், நீங்கள் பேருந்தில் எல்லாம் போகவே முடியாது.

அதில் பெண்களை உரசுவதற்கு என்றே சிலர் வருவார்கள் என்று கூறினார். இதற்கு சரவணன் 'நானும் காலேஜ் படிக்கும் பொது செஞ்சி இருக்கேன் சார்' என்று கூறினார். இந்த கருத்தால் தற்போது கடுப்பாகியுள்ள வனிதா, அனைவரும் சரவணனுக்கு வோட் செய்து அவரை வெளியில் அனுப்புங்கள். அவர் இந்த நிகழ்ச்சிக்கு அவர் அருகதை இல்லாதவர். பலர் கூறி நான் கேள்விபட்டேன், அவர் பேருந்தில் பெண்களை உருசுவர் என்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் பேசியுள்ளார் என்று பதிவிட்டுள்ளார்.




