பிக் பாஸ் சீசன் 6ன் டைட்டில் வின்னர் குறித்து வனிதா விஜயகுமார் அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கி தற்போது 50 நாட்களை கடந்து இருக்கிறது. இந்த முறை நிகழ்ச்சியை விறுவிறுப்பாக கொண்டு செல்ல பிக் பாஸ் பல மாற்றங்களை செய்து இருக்கிறார். இதனால் நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாளில் இருந்தே போட்டியாளர்களுக்கு டாஸ்க் கொடுக்கப்பட்டு சண்டை தொடங்கி இருக்கிறது.
மேலும், இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் ஜிபி முத்து, அசீம் , அசல், ராபர்ட், ராமசாமி, ஏடிகே, ஜனனி, அமுதவாணன், விஜே மஹேஸ்வரி, விஜே கதிரவன், ஆயிஷா, விஜே ரக்சிதா, மணிகண்டன், மெட்டி ஒலி சாந்தி, விக்ரமன், குயின்ஸி மற்றும் நிவாஷினி, சிவின் கணேசன் என 20 பேர் கலந்து கொண்டு இருக்கிறார்கள். பின் முதல் வாரத்திலேயே வைல்ட் கார்ட் எண்ட்ரியாக மைனா நந்தினி வந்து இருந்தார்.
பிக் பாஸ் சீசன் 6:
வழக்கம் போல் போட்டியாளர்கள் மத்தியில் கலவரம், சண்டைகளும் தொடங்கி நிகழ்ச்சி பரபரப்பாக சென்று கொண்டு இருக்கிறது. இதுவரை இந்த நிகழ்ச்சியில் இருந்து ஜி.பி.முத்து, மெட்டிஒலி சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா, மகேஸ்வரி, நிவாஷினி, ராபர்ட் ஆகியோர் வெளியேறி இருக்கிறார்கள். 21 போட்டியாளர்களில் இருந்து 7 போட்டியாளர்கள் போக தற்போது 14 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் விளையாடி வருகின்றனர்.
We should decide who will go into the finals.😎🔥please take the more gutsy people who deserve. The winner should be the most deserving person. I’m rooting for #Shivin – Vanitha. 💥#BB6StarShivin#BiggBossTamil6 pic.twitter.com/fhlYPqazwt
— 𝘼𝙧𝙪𝙣🐼 (@opinier27) December 4, 2022
பழங்குடியினர் மற்றும் ஏலியன் டாஸ்க் :
கடந்த வாரம் கேப்டனான அசீம் பல அதிரடி மாற்றங்கள் செய்து இருந்தார். இது ரசிகர்கள் மத்தியிலும் வரவேற்கப்பட்டது. பின் பழங்குடியினர் மற்றும் ஏலியன் டாஸ்க் கொடுக்கப்பட்டிருந்தது. பழங்குடியினரிடம் இருக்கும் செல்வத்தை ஏலியன்கள் திருட வேண்டும். ஏலியன்கள், பழங்குடியினரை எப்படி வேண்டுமானாலும் கோபப்படுத்தலாம் என்று பிக் பாஸ் கூறி இருக்கிறார். இந்த டாஸ்க் கொடுக்கப்பட்டதிலிருந்து போட்டியாளர்கள் மத்தியில் கடுமையான வாக்குவாதம் சென்று இருந்தது.
வனிதா அளித்த பேட்டி:
பின் கடந்த வாரம் நிகழ்ச்சியில் குறைந்த வாக்குகள் பெற்றது குயின்சி வெளியேறி இருக்கிறார். இந்த நிலையில் வனிதா அவர்கள் சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் அவர், இந்த சீசனில் வெற்றி பெறும் வின்னர் குறித்து சொன்னது, இந்த முறை நிகழ்ச்சியில் ரொம்ப தைரியமாக, ஸ்ட்ராங்காக இருக்கும் நபருக்கு தான் டைட்டில் வின்னர் பட்டத்தை கொடுக்க வேண்டும்.
டைட்டில் வின்னர் குறித்து சொன்னது:
அந்த பட்டம் அவர்களுக்கு தகுதியானதாக இருக்க வேண்டும். இந்த ட்ராமா செய்பவர்கள், போலியாக நடிப்பவர்களுக்கு இந்த பட்டம் கிடைக்கக்கூடாது. அந்த வகையில் எனக்கு தெரிந்தவரை இந்த சீசனில் டைட்டில் வின்னர் ஆகக்கூடிய தகுதி உடையவர் சிவின் தான். அசீம் இரண்டாவது இடம் வந்தாலும் சரி. ஆனால், சிவின் தான் இந்த சீசன் உடைய டைட்டில் வின்னருக்கு தகுதியானவர் என்று கூறி இருக்கிறார்.