எங்கு சென்றாலும் மகளின் புராணம் தானா? படத்தில் நடிக்காத தனது மகள் குறித்து சொற்பொழிவாற்றிய வனிதா.

0
291
- Advertisement -

டீன்ஸ் பட விழாவில் நடிகை வனிதா விஜயகுமார் கூறி இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் தன்னுடைய வித்தியாசமான கதையின் மூலம் தனெக்கென ஒரு பாதையை உருவாக்கியவர் நடிகர் பார்த்திபன். இவர் எப்போதும் வித்தியாசமான முறையில் படங்களை கொடுப்பதில் கை தேர்ந்தவர். இவர் சினிமா துறையில் இயக்குனர் , தயாரிப்பாளர், கதையாசிரியர், எழுத்தாளர் என பல திறமைகளை கொண்டவர்.

-விளம்பரம்-

மேலும், இவருடைய நடிப்பிலும், இயக்கத்திலும் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது. அந்த வகையில் கடந்த 2019 ஆம் ஆண்டு இவருடைய வித்தியாசமான படைப்புகளில் ஒன்றாக வெளிவந்த “ஒத்த செருப்பு சைஸ் 7” படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் முழுக்க முழுக்க ஒரே ஒருவரை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. இதுவரை தமிழ் சினிமா உலகில் கொண்டு வராத புது முயற்சியை பார்த்திபன் செய்து இருந்தார்.

- Advertisement -

பார்த்திபன் திரைப்பயணம்:

இதனை தொடர்ந்து இவர் எடுத்த சிங்கிள் ஷாட் படமான ‘இரவின் நிழல்’ படமும் கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்தது. இந்த படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. தற்போது இயக்குனர் பார்த்திபன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் டீன்ஸ். இந்தப் படத்தை பார்த்திபனை இயக்கி தயாரித்து நடித்தும் இருக்கிறார். சிறுவர்களுடைய குழுவை வைத்து இந்த டீன்ஸ் என்ற படத்தை பார்த்திபன் இயக்கியிருக்கிறார்.

விழாவில் வனிதா:

இந்த படத்திற்கு டி இமான் இசையமைத்து இருக்கிறார். சுதர்சன் இந்த படத்தின் படத்தொகுப்பு வேலையை செய்திருக்கிறார். இந்நிலையில் இந்த படத்தினுடைய இசை வெளியீட்டு விழா தற்போது கோலாகலமாக நடந்திருக்கிறது. இந்த விழாவில் பங்கேற்ற நடிகை வனிதா விஜயகுமார், என்னுடைய வாழ்க்கையில் இதற்கு முன்பு எத்தனையோ படங்களுடைய ஆடியோ ரிலீஸ்க்கு சென்று இருக்கிறேன். ஆனால், இது என்னுடைய மனதிற்கு ரொம்ப நெருக்கமான ஆடியோ லான்ச்.

-விளம்பரம்-

மகள் ஜோவிகா குறித்து சொன்னது:

என்னுடைய மகள் ஜோவிகா இந்த படத்தில் நடித்திருந்தால் கூட நான் இந்த அளவிற்கு சந்தோஷப்பட்டிருக்க மாட்டேன். முதன் முதலில் நான் இயக்குனர் பி வாசு அவர்களிடம் தான் உதவி இயக்குனாக பணியாற்றினேன். அதற்குப் பிறகு காக்கை சிறகினிலே என்ற திரைப்படத்தில் இயக்குனர் பார்த்திபன் உடன் நான் உதவி இயக்குனராக பணியாற்றினேன். இன்று என்னுடைய மகள் ஜோவிகா இந்த டீன்ஸ் திரைப்படத்தில் இயக்குனர் பார்த்திபனோடு உதவி இயக்குனராக பணியாற்றி இருப்பதை நினைத்தால் எனக்கு ரொம்ப பெருமையாகவும் சந்தோஷமாகவும் இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.

ஜோவிகா குறித்த தகவல்:

சமீப காலமாக சோசியல் மீடியாவில் சர்ச்சை நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கும் வனிதா விஜயகுமாரின் மகள் தான் ஜோவிகா. இவர் மகள் ஜோவிகா மக்கள் மத்தியில் அறியப்பட்டது சமீபத்தில் முடிவடைந்த பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி மூலம் தான். இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் ஜோவிகா நன்றாகத்தான் விளையாடி வந்தார். அதற்கு பிறகு இவர் மாயா குரூப்பில் சேர்ந்து கொண்டு செய்த வேலைகள் ரசிகர்கள் மத்தியில் கடுப்பை ஏற்றி இருந்தது. இதனால் இவர் சீக்கிரமாக வெளியேறிவிட்டார் என்று சொல்லலாம். நிகழ்ச்சிக்குப் பிறகு இவர் மாடலிங்கில் குதித்து விட்டார். பயங்கரமாக போட்டோ சூட் நடத்தி புகைப்படங்களை எல்லாம் வெளியிட்டு வருகிறார். கூடிய விளைவிலும் இவர் படங்களில் நடிப்பார் என்று கூறப்படுகிறது.

Advertisement