விஜய ஏலியன் கிட்ட மாட்டி அவர ஆப்ரெட் பண்ணா எப்படி இருக்கும் ? – வைரலாகும் வெங்கட் பிரபுவின் வீடியோ. பீதியில் விஜய் ரசிகர்கள்.

0
1921
- Advertisement -

விஜய்யின் தளபதி 68 படம் குறித்து வெங்கட் பிரபுவை நெட்டிசன்கள் கலாய்த்து வரும் மீம்ஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் வெளியாகும் அனைத்து படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் வாரிசு. இந்த படத்தை வம்சி இயக்கி இருந்தார்.

-விளம்பரம்-
Thalapathy68

இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், யோகி பாபு, பிரகாஷ் ராஜ், நாசர், பிரபு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், சங்கீதா, நாசர், போன்ற பலர் நடித்து இருந்தார்கள். குடும்ப பின்னணியை மையமாக கொண்ட கதை. இந்த படம் பொங்கல் விருந்தாக ரசிகர்களுக்கு வெளியாகி இருந்தது. மேலும், வாரிசு படம் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தாலும், உலக அளவில் 300 கோடிக்கும் மேல் அதிகமாக வசூல் செய்து இருந்ததாக அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகி இருந்தது.

- Advertisement -

லியோ படம்:

இதனை அடுத்து தற்போது தளபதி விஜய்யை வைத்து “லியோ” என்ற படத்தை லோகேஷ் இயக்கி வருகிறார். இப்படத்தில் சஞ்சய் தட், த்ரிஷா, கெளதம் மேனன், அர்ஜுன், மேத்திவ் தாமஸ், மிஸ்கின், மன்சூர் அலி கான் என பலர் நடித்து வருகின்றனர். இந்த படம் அதிரடி ஆக்சன் படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. தற்போது மும்முரமாக படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

தளபதி 68 படம்:

இதனை அடுத்து நடிகர் விஜய்யின் தளபதி 68-வது படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்க இருக்கும் தகவல் உறுதியாகி இருக்கிறது. இந்த படத்தை ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. யுவன் சங்கர் ராஜா தான் தளபதி 68 படத்திற்கு இசையமைப்பாளர் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், இது ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனத்தின் 25 வது படமாக உருவாக இருப்பதால் இந்த படத்தில் முன்னணி கலைஞர்கள் இணைந்து பணியாற்றி இருப்பதாக கூறப்படுகிறது.

-விளம்பரம்-

படம் குறித்த தகவல்:

இது ஒரு பக்கம் இருக்க, பொதுவாகவே வெங்கட் பிரபுவின் படத்தில் ஜெய், சிவா, பிரேம்ஜி, வைபவ், அரவிந்த் ஆகாஷ் ஆகியோர் இடம் பெறுவது வழக்கம். ஒருமுறை சிவகார்த்திகேயன் கூட விருது வழங்கும் விழாவில் வெங்கட் பிரபு கதையில்லாமல் கூட படம் எடுப்பார் பிரேம்ஜி இல்லாமல் எடுக்க மாட்டார் என்றெல்லாம் கலாய்த்து இருந்தார்.இந்நிலையில் இந்த படத்தில் நடிக்கப் போகும் நடிகர்கள் குறித்து நெட்டிசன்கள் போட்டிருக்கும் மீம்ஸ் தான் ட்ரென்டிங் ஆகி வருகிறது. அதாவது, பகவதி படத்தில் விஜய் டீக்கடையில் வடிவேலு வேலை செய்வார்.

நெட்டிசன்கள் மீம்ஸ்:

அப்போது வடிவேலுவை பார்க்க ஊர்காரர் சிங்கமுத்து வருவார். அவரை பார்த்தவுடன் டீ குடிக்க வடிவேலு கூப்பிடுவார். உடனே சிங்கமுத்து தன்னுடைய மொத்த ஊர்க்காரர்களையும் கூப்பிடுவார். இதை பார்த்த விஜய், சிங்கிள் டீ கேட்ட ஓகே பண்ணேன். இப்போ ஊரே உட்கார்ந்து சாப்பிட்டு இருக்கு என்று காண்டாகிவிடுவார். இதில் வடிவேலு ஏஜிஎஸ் நிறுவனம், வெங்கட் பிரபுவை சிங்கமுத்து என உருவாக்கி வெங்கட் பிரபு அழைக்க பிரேம்ஜி, வைபவ், மகத், சிவா என பலருமே ஒட்டுமொத்தமாக உள்ளே நுழைகின்றனர். இது குறித்த வீடியோ தான் தற்போது இணையத்தில் மீம்ஸுகளாக வைரலாகி வருகிறது. மேலும், வெங்கட் பிரபு விஜய்யை ஏலியன் கடித்திக்கொண்டு போனால் எப்படி இருக்கும் என்று பேசிய வீடியோ ஒன்றை பகிர்ந்து ஒரு வேலை ஏலியன் கதைய எடுத்து சொதப்பிடுவாரோ என்று விஜய் ரசிகர்கள் பீதியில் இருக்கின்றனர்.

Advertisement