கை வனிதா விஜயகுமார் கொடிய நோயால் பாதிக்கப்பட்டு இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சமீப காலமாக சோசியல் மீடியாவில் சர்ச்சை நாயகியாக இருந்த வனிதா விஜயகுமார் தற்போது தொழிலதிபராக கலக்கி கொண்டு வருகிறார். தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான தம்பதிகளான விஜயகுமார் – மஞ்சுளா ஆகியோரின் மகள் தான் வனிதா. ஆரம்பத்தில் இவர் சினிமாவில் சில படங்களில் மட்டும் நடித்தார். திருமணத்துக்கு பின்னர் வனிதா படங்களில் நடிப்பதை நிறுத்தி கொண்டார்.
இதையடுத்து குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக வனிதாவிற்கு இரண்டு முறை விவாகரத்து ஏற்பட்டது. அது மட்டுமில்லாமல் தன் தந்தையுடன் பிரச்சனை காரணமாக தன்னுடைய இரண்டு மகள்களுடன் வனிதா தனித்தனியாக வசித்து வருகிறார். மேலும், நீண்ட இடைவெளிக்கு பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் வனிதா கலந்து கொண்டிருந்தார். இந்த நிகழ்ச்சியின் மூலம் தான் வனிதா மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார்.
வனிதா நடிக்கும் படங்கள்:
பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு வனிதா அவர்கள் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருந்தார். தற்போது இவர் படங்கள், சீரியல்கள் என எதையும் விட்டு வைக்காமல் ஏதாவது ஒரு எதையும் செய்து கொண்டு இருக்கிறார். அந்த வகையில் இவர் காத்து என்ற படத்தில் நடனம் ஆடி இருக்கிறார். இதனை தொடர்ந்து இவர் அனல்காற்று, அந்த கண், சிவப்பு மனிதர்கள், கொடூரன், தில்லிருந்தா போராடு, பிக் கப் டிராப் உட்பட பல படங்களில் கப் பிசியாக நடித்து வருகிறார்.
வனிதாவின் யூடியூப் சேனல் :
மேலும், இவர் நடிப்பைத் தாண்டி யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். இதில் இவரை எக்கச்சக்கமான ரசிகர்கள் பாலோ செய்கிறார்கள். இதுமட்டுமில்லாமல் இவர் அழகு சாதன பொருட்கள் விற்பனை செய்யும் அங்காடி ஒன்றை கடந்த ஆண்டு தொடங்கினார். இப்படி வனிதா அவர்கள் பல்வேறு தொழில்களில் கவனம் செலுத்தி வருகிறார். இதனிடையே இவர் 2020 ஆண்டு பீட்டர் பவுல் என்பவரை மூன்றாவது திருமணம் செய்துக்கொண்டார்.
வனிதா-பீட்டர் பவுல் திருமணம்:
பீட்டர் பவுல் சினிமாவில் எடிட்டிங் கலைஞராக இருந்தவர். இவர்களுடைய திருமணம் குறித்து பல சர்ச்சைகள் சோசியல் மீடியாவில் எழுந்திருந்தது. ஆனால், திருமணம் ஆன கொஞ்ச நாட்களிலேயே வனிதாவிற்கும், பீட்டர் பவுலுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டார்கள். பின் சமீபத்தில் பீட்டர் பவுல் திடீர் மரணமடைந்தார். இவரின் இறப்பிற்கு வனிதா இரங்கல் தெரிவித்து இருந்தார்.
வனிதாவை பாதித்த நோய்:
இந்நிலையில் சமீபத்தில் நடிகை வனிதா பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் அவர், எனக்கு கிளாஸ்ட்ரோபோபியா என்ற நோய் இருக்கிறது. இந்த விஷயம் என்னுடன் நெருக்கமாக இருப்பவர்களுக்கு மட்டும் தான் தெரியும். சிறிய இடங்களில் கூட என்னால் அதிக நேரம் இருக்க முடியாது. லிப்ட், கழிவறை போன்ற இடங்களில் அதிக நேரத்தை என்னால் செலவழிக்க முடியாது என்று கூறுகிறார்.