லண்டனில் இருக்கும் விஜயகுமரின் பேரன் – ப்பா, இப்போ எப்படி இருக்கார் பாருங்க. அப்படியே தாத்தாவின் முகம்.

0
29639
vanitha-family
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான வணிதாவிற்கும் அவரது குடும்பத்தாருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு இருந்தது. இதனால் வனிதாவின் சகோதரர்களான அருண்விஜய், ப்ரீதா, ஸ்ரீதேவி, அனிதா, கவிதா என்று அனைவருமே வனிதாவிடம் பேசுவதை நிறுத்தி விட்டார்கள். இதனால் இரண்டு திருமணம் ஆன பின்னரும் வனிதா தனியாகத்தான் வாழ்ந்து வருகிறார்.

-விளம்பரம்-

வனிதா விஜய்குமார் அருண் விஜய்யின் சொந்த சகோதரி இல்லை என்பது பலரும் அறிந்திடாத ஒன்று. விஜயகுமார் கடந்த 1969 ஆம் ஆண்டு முத்துக்கன்னு என்பவரை திருமணம் செய்து கொண்டார்.பின்னர் 1976 யில் நடிகை மஞ்சுளாவை திருமணம் செய்து கொண்டார். விஜயகுமாரின் முதல் மனைவியான முத்துக்கனுக்கு பிறந்தவர் தான் அருண் விஜய். மேலும், இவருடன் அனிதா , கவிதா என்ற இரண்டு சகோதரிகள் பிறந்தனர்.

- Advertisement -

மேலும், மஞ்சுளாவிற்கு பிறந்தவர்கள் வனிதா, ப்ரீத்தா மற்றும் ஸ்ரீதேவி. ஆனால், அருண் விஜய் அனைவரையும் உடன் பிறந்த சகோதரிகளாக தான் பாவித்து வந்தார்.அருண் விஜய்யின் சொந்த சகோதரியான கவிதா, சரத்குமார் நடிப்பில் வெளியான கூலி திரைப்படத்தில் நடித்திருந்தார். ஆனால், இவரின் மற்றொரு சகோதரியான அனிதா குறித்து பலரும் அறிந்திருக்க மாட்டார்கள் கோகுல் கிருஷ்ணன் என்ற மருத்துவரை கடந்த 97 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

மேலும், இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் இருக்கிறார் தற்போது தனது கணவர் மற்றும் பிள்ளைகளுடன் லண்டனில் வசித்து வருகிறார். சமீபத்தில் இவரது மகளின் புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலானது. இப்படி ஒரு நிலையில் இவரது மகனின் புகைப்படம் வெளியாகி இருக்கிறது. அதில் பார்பதர்க்கு அச்சு அசலாக விஜயகுமார் சாயலில் இருகிறார். இதோ அவரின் புகைப்படம்.

-விளம்பரம்-
Advertisement