வனிதாவுக்கு மெட்டி போடீங்களே, எனக்கு இத பண்ணுங்க சேகர் அண்ணா – சூர்யா தேவி வெளியிட்ட வீடியோ.

0
855
suryadevi

வனிதா மற்றும் பீட்டர் பவுலின் திருமண விஷயம் தான் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக சமூக வலைதளங்களில் ஹாட் டாப்பிக்காக இருந்து வருகிறது. ஏற்கனவே இரண்டு முறை திருமணமாகி விவாகரத்து பெற்றவ வனிதா திருமணமாகி விவாகரத்து பெறாமல் இருக்கும் பீட்டர் பவுலை திருமணம் செய்ததால் இதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் குவிந்தது. அதிலும் குறிப்பாக சூர்யா தேவி என்பவர் வனிதாவை திட்டி தீர்த்து அடிக்கடி தனது யூடியூப் சேனலில் வீடியோவாக வெளியிட்டு வந்தார்

You sleep around for work': BJP's S Ve Shekher slammed for sexist ...

இதையடுத்து வனிதா சூர்யா தேவி மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தார் வனிதாவின் புகாரை ஏற்ற போலீஸார் சூர்யா தேவியை கைது செய்து பின்னர் ஜாமீனில் விடுவித்தார்கள். ஜாமினில் வெளியே வந்த சூர்யாவுக்கு கொரோனா இருக்கிறது என்று சுகாதாரத் துறையினர் தெரிவித்தார்கள். ஆனால், தனக்கு எதுவும் இல்லை என்று கூறி வரும் சூர்யா தேவி தலைமறைவாகி இருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதனால் சூர்யா தேவி தற்போது தலைமறைவாக இருந்து வருகிறாராம்

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் சூர்யா தேவி நடிகரும் அரசியல் பிரமுகருமான எஸ் வி சேகர் இடம் உதவி கேட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார் அந்த வீடியோவில் பேசியுள்ள சூர்யா தேவி வணக்கம் எஸ் வி சேகர் அண்ணா , நாம் ஏற்கனவே சந்தித்து இருக்கிறோம் நான் தமிழிசை சௌந்தரராஜன் அவர்களை தகாத வார்த்தைகளில் பேசியிருந்தால் என்னை சிறையில் அடைத்தார்கள். அப்போது நான் ஜாமீன் பெற்று வெளியே வந்த போது நீங்களும் ஏதோ ஒரு பிரச்சினைக்காக கோர்ட்டுக்கு வந்து இருந்தீர்கள் அப்போது நான் உங்களிடம் பேச வில்லை. இருந்தாலும் இருவரும் பார்த்துக் கொண்டோம். அந்த உரிமையில் கேட்கிறேன் எனக்கு ஒரு ஜாமீன் பெற்றுக் கொடுங்கள் அண்ணா.

எனக்கு இருக்கும் பிரச்சினைகளை எல்லாம் நீங்கள் பார்த்திருப்பீர்கள். நானும் சமீபத்தில் தான் உங்களின் புகைப்படம் ஒன்றை பார்த்தேன் அதில் ஒரு நாடகத்திற்காக நீங்களும் வனிதாவும் மிகவும் நெருக்கமாக இருந்து நீங்கள் அவருக்கு மீட்டி கூட போட்டு விட்டிருக்கிறீர்கள். ஒரு செலப்பிரிட்டி அப்படி செய்தால் அது ஒரு சாதாரண புகைப்படம் ஆனால் என்னைப்போல ஒரு சாதாரண பெண் ஒரு செலப்பிரிட்டியுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டால் அது தப்பா, அது சரக்கா இல்லை ஜூஸா என்பதை எல்லாம் பார்க்க மாட்டார்களா. எனவே நான் உங்களை ஒரு அண்ணனாக நினைத்து உதவி கேட்கிறேன். எனக்கு இந்த ஒரு உதவியை செய்யுங்கள் எனக்கு ஒரே ஒரு ஜாமின் எடுத்துக் கொடுங்கள் அண்ணா என்று கேட்டிருக்கிறார்.

-விளம்பரம்-
Advertisement