முதல்ல இப்படி பண்றத நிறுத்து – யாஷிகாவின் பதிவில் வனிதா செய்த கமன்ட்

0
2731
- Advertisement -

கடந்த சில நாட்களுக்கு முன் சென்னை, மாமல்லபுரம் அருகே நடந்த கார் விபத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் படுகாயகங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்தில் வள்ளி ஷெட்டி பவானி என்ற பெண் பலியானார். இந்த விவகாரத்தில் யாஷிகா மீது அதி வேகமாக காரை ஓட்டியது, உயிர் சேதம் ஏற்படுத்தியது என்று மூன்று பிரிவுகளில் வழக்கப்பதிவு செய்யப்பட்டுள்ளது.மேலும், விபத்திற்கு பின்னர் யாஷிகா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முதல் முறையாக உருக்கமான பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில், தன்னால் தான் தன் தோழி உயிர் போய்விட்டது. நான் வாழ தகுதி இல்லாதவர் என்று கூறி புலம்பியுள்ளார்.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் யாஷிகாவிற்கு ஆறுதல் சொல்லியுள்ள வனிதா, டார்லிங் இது யாருக்கு வேண்டுமானாலும் நடக்கலாம் அதனால்தான் அதை விபத்து என்று சொல்கிறார்கள். பிறப்பு மற்றும் இறப்பு என்றும் ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட ஒன்று. அதை யாராலும் மாற்ற முடியாது. இதற்கு நீயும் ஒரு உதாரணம். உன் கையில் இல்லாததை எண்ணி உன்னை நீ திட்டிக் கொள்வதை முதலில் நிறுத்து. மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை பற்றி கவலை படாதே. இந்த ஒரு கோரமான விபத்தில் இருந்து நீ தப்பியதற்கு காரணம் இருக்கிறது. கடவுள் உன்னை ஆசீர்வதிப்பார் டார்லிங் என்று பதிவிட்டுள்ளார்.

இதையும் பாருங்க : விஜய் – அஜித் இணைந்து நடித்த படத்தில் அவர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா ? 25 ஆண்டு கழித்து தயாரிப்பாளர் சொன்ன ரகசியம்.

- Advertisement -

இப்படி ஒரு சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற யாஷிகா, விபத்து நடந்ததற்கான காரணத்தை கூறியுள்ளார் அதில், பவானி என்னுடைய 6 வருட தோழி. அவர் அமெரிக்காவில் இன்ஜினியராக பணியாற்றி வந்தார். தன்னுடைய பெற்றோரை பார்ப்பதற்காக இந்தியா வந்தார். அப்படியே என்னை பார்ப்பதற்காக சென்னைக்கு வந்தார் நாங்கள் நான்கு பேரும் கடந்த ஜூலை 24-ஆம் தேதி இரவு உணவு சாப்பிடுவதற்காக கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஒரு ரசாயண விட்டு அங்கிருந்து இரவு 11 மணி அளவில் சென்னைக்கு திரும்பி வந்து கொண்டிருந்தோம். காரை நான்தான் ஓடினேன். ஆனால் நான் வேகமாக ஓட்டவில்லை. சாலை மிகவும் இருட்டாக இருந்ததால் என்னால் சாலையை சரியாக பார்க்க முடியவில்லை.

இதனால் துரதிஷ்டவசமாக சாலையின் நடுவே இருந்த தடுப்புச்சுவரில் மோதி விட்டேன். நானும் பின்னால் வந்து கொண்டிருந்த இரண்டு நண்பர்களும் சீட் பெல்ட் அணிந்து இருந்தோம். ஆனால், எனக்கு அருகில் அமர்ந்திருந்த பவானி சீட் பெல்ட் அணிய வில்லை. அதேபோல அவர் பக்கம் இருந்த கண்ணாடியை திறந்து வைத்து இருந்தார். கார் கவிழ்ந்த வேகத்தில் அவர் வெளியில் வீசப்பட்டு விட்டார். நாங்கள் மூவரும் காருக்குள்ளேயே சிக்கிக் கொண்டோம். கதவுகள் திறக்க முடியாதபடி லாக் ஆகிவிட்டது. அதனால்  சன் ரூஃப் கண்ணாடியைத் திறந்து வெளியேறினோம். நான் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சைகாக அனுபாதிக்கப்பட்டேன். பின்னர் தான் பவானி இருந்த தகவல் எனக்கு தெரிந்தது. நான் குடித்துவிட்டு வண்டி ஓட்டவில்லை என்று கூறி இருக்கிறார்.

-விளம்பரம்-
Advertisement