பிக் பாஸ் வனிதாவின் திருமண பிரச்சனை தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பேசப்பட்டு வரும் ஒரு விஷயமாக இருந்து வருகிறது. நடிகையும் பிக்பாஸ் போட்டியாளரான வனிதா கடந்த ஜூன் மாதம் 27ஆம் தேதி பீட்டர் பவுல் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் பீட்டர் பவுலுக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருப்பது பின்னர்தான் தெரிய வந்தது. இதையடுத்து பீட்டரின் முதல் மனைவி காவல் நிலையத்திலும் புகார் அளித்திருந்தார்.
பீட்டர் பவுலின் மனைவி புகார் அளித்ததை தொடர்ந்து தனக்கு நடைபெற்றது திருமணமே இல்லை என்றும் அது வெறும் காதலின் வெளிப்பாடு தான் என்று அந்தர் பல்டி அடித்தார் வனிதா. அதேபோல வனிதாவை பலரும் விமர்சித்து வரும் நிலையில் தன்னை கடுமையாக விமர்சித்த ரவீந்திரன் மற்றும் சூர்யாவை மீதும் வழக்கு தொடுத்துள்ளார். வனிதா தற்போது பக்கபலமாக இருந்து வருவது வனிதாவின் வகையிலான ஸ்ரீதர் என்பவர் தான்.
வழக்கறிஞரான ஸ்ரீதர் ஏற்கனவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் வனிதா இருந்த போது அவரது மூன்றாவது குழந்தையின் கடத்தல் விவகாரத்தில் வழக்கறிஞராகவும் இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதேபோல மீரா மிதுன் மற்றும் ஜோ மைக்கேல் இருவருக்கும் பிரச்சினை ஏற்பட்டபோது மீரா மிதுனுக்கு இவர்தான் வழக்கறிஞராக ஈடுபட்டு வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த இரண்டு விஷயங்களும் நாம் அனைவரும் அறிந்த ஒரு விஷயம் தான். ஆனால் இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் முன்னாள் போட்டியாளர்களான சாண்டி மற்றும் காஜல் பசுபதி பிரச்சினைக்கும் இவர்தான் வழக்கறிஞராக இருந்திருக்கிறார். சாண்டி மற்றும் காஜல் இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில் யாருக்கும் தெரியாமல் திருமணமும் செய்துகொண்டனர். பின்னர் இவர்களுக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் விவாகரத்து பெற்றுவிட்டனர். இவர்களுக்கு விவாகரத்து வாங்கிக் கொடுத்தது வழக்கறிஞர் ஸ்ரீதர் தான் என்று செய்திகள் வெளியாகி இருக்கிறது.