வனிதாவுக்கு மிகவும் பிடித்த சகோதிரி ப்ரீத்தாவின் மூன்று மகன்கள். இவங்களுக்கு இவ்வளவு பெரிய பசங்க இருக்காங்களா ?

0
1982
preetha
- Advertisement -

பழம் பெரும் சினிமா தம்பதிகளான விஜய குமார்- மஞ்சுளா விற்கு 4 பெண் மற்றும் 1 ஆண் பிள்ளைகள் இருப்பது நமக்கு தெரியும். இதில் நடிகை ப்ரீத்தா என்பவரை நம்மில் சில நபர்கள் மறந்திருக்க வாய்ப்புண்டு.ஆனால், அவரது கணவர் இயக்குனர் ஹரியை நம் அனைவருக்கும் தெரியும். நடிகை ப்ரீதா 1998 ஆம் ஆண்டு நடிகர் சூர்யா நடித்த’சந்திப்போமா’ படத்தில் நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் சூப்பர் ஸ்டார் நடித்த ‘படையப்பா’படத்திலும் ரஜினியின் இரண்டு மகளில் ஒருவராகவும் நடித்துள்ள்ளார். மேலும், தமிழ் , தெலுகு , மலையாள படங்களிலும் நடித்துள்ளார்.

-விளம்பரம்-

விஜயகுமார் கடந்த 1969 ஆம் ஆண்டு முத்துக்கன்னு என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின்னர் 1976 யில் நடிகை மஞ்சுளாவை திருமணம் செய்து கொண்டார்.விஜயகுமாரின் முதல் மனைவியான முத்துக்கனுக்கு பிறந்தவர் தான் அருண் விஜய். மேலும், இவருடன் அனிதா , கவிதா என்ற இரண்டு சகோதரிகள் பிறந்தனர். மேலும், மஞ்சுளாவிற்கு பிறந்தவர்கள் வனிதா, ப்ரீத்தா மற்றும் ஸ்ரீதேவி. ஆனால், அருண் விஜய் அனைவரையும் உடன் பிறந்த சகோதரிகளாக தான் பாவித்து வந்தார்.

இதையும் பாருங்க : அவருக்கு கோபம் வந்தா இந்த வார்த்தையில் தான் திட்டுவாரு – அஜித் வீட்டிற்கு போன அனுபவம் சொன்ன சீரியல் நடிகர்.

- Advertisement -

விஜயகுமார் குடும்பத்தில் கவிதாவை தவிர மற்ற அனைவருமே நடிகர்கள் தான். இதில் அருண் விஜய் மட்டும் தான் இப்போதைக்கு நடித்து வருகிறார். மற்ற அனைவரும் திருமணம் செய்து செட்டில் ஆகி விட்டனர். அதே போல நடிகை ப்ரீத்தா படங்களில் தொடர்ந்து நடுத்து வந்தாலும் இவருக்கு முன்னணி ஹீரோக்களுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. மேலும் ப்ரீதா இயக்குனர் ஹரியை 3 வருடங்களாக காதலித்து வந்துள்ளார்.

பின்னர் இவர்கள் இருவரும் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பின்னர் படங்களில் நடிப்பதை நிறுத்திக் கொண்டார் நடிகை ப்ரீதா.நடிகை ப்ரீதா, அவரின் உறவினரான இயக்குனர் ஹரியை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு இந்த தம்பதியருக்கு 3 ஆண் பிள்ளைகளும் பிறந்தனர். இதோ அவர்களின் புகைப்படங்கள்.

-விளம்பரம்-
Advertisement