அவருக்கு கோபம் வந்தா இந்த வார்த்தையில் தான் திட்டுவாரு – அஜித் வீட்டிற்கு போன அனுபவம் சொன்ன சீரியல் நடிகர்.

0
2833
ajith
- Advertisement -

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித். இவருக்கு இருக்கும் ரசிகர்கள் பட்டாளம் பற்றி நாம் அனைவருமே அறிவோம். சாதாரண ரசிகர்களை போன்று இவருக்கு திரைத்துறையிலும் பல்வேறு பிரபலங்கள் ரசிகராக இருந்து வருகிறார்கள். அந்த வகையில் நடிகரும் சீரியல் நடிகருமான ஜெமினி கூட அஜித்தின் தீவிர ரசிகர். இவர் அஜித்தின் மீதுள்ள அன்பினால் அஜித்தின் பட பெயரை கையில் பச்சை குத்திக் கொண்டிருக்கிறார். மேலும், இவர் அஜித்துடன் கீரிடம் படத்திலும் பணியாற்றி இருக்கிறார்.

வீடியோவில் 3 : 35 நிமிடத்தில் பார்க்கவும்

-விளம்பரம்-

இவர் பேட்டி ஒன்றில் பேசுகையில், நான் ஜெமினியில் வேலை செய்தபோது சம்பளம் ஜெமினியில் வாங்குவேன் ஆனால் அதிகம் வேலை அஜித்துக்கு தான் செய்வேன் நான் அஜித் வீட்டிற்கு சென்று இருக்கிறேன். என்னிடம் அவர் இந்த சினிமா எல்லாம் வேண்டாம் டா, ஏதாவது வேலையை பாரு உனக்கு குடும்பம் இருக்கிறது சினிமா எல்லாம் மிகவும் கஷ்டமான விஷயம் என்று சொன்னார். ஆனால், எனக்கு அஜித் முன்னாடி ஒரு நடிகனாக போய் நிற்க வேண்டும் என்பதுதான் ஆசை.

- Advertisement -

நான் அஜீத் வீட்டிற்கு சென்று இருக்கிறேன் அவர் மங்காத்தா படத்தில் ஒரு சீனில் வருவார் அல்லவா வெறும் ஷார்ட்ஸ் மட்டும் போட்டுக்கொண்டு சட்டையில்லாமல். அப்படித்தான் வீட்டிலேயும் இருப்பார் அவர் அதிகம் சத்தம் போட்டுக்கூட பேசமாட்டார். அதிகம் கோபப்பட மாட்டார் அவருக்கு கோபம் வந்தால் அதிகபட்சமாக திட்டும் வார்த்தை ஸ்டுப்பிட் அவ்வளவுதான். அவர் யாரையும் டிஸ்டர்ப் பண்ண மாட்டார் அவரையும் யாரும் டிஸ்டர்ப் பண்ண கூடாது.

This image has an empty alt attribute; its file name is 1-64-1024x471.jpg

இது தான் அவருடைய லாஜிக். ஒரு முறை நான் ஊருக்கு போகிறேன் என்று சொன்னேன் அப்போது அவரிடம் 2000 ரூபாய் தான் இருந்தது உடனே ஒருவரை அனுப்பி போய் 8000 ரூபாய் பணம் எடுத்துக் கொண்டு வா என்று சொன்னார். ஆனால் எனக்கு அப்போது பணம் பெரிய விஷயம் கிடையாது ஆனால் அவர் பரவாயில்லை வைத்துக்கொள் என்று சொன்னார். அதுதான் அஜித். அவராகவே அனைத்தையும் செய்வார்

-விளம்பரம்-
Advertisement