நான்லா இப்போ இருந்து இருந்தா எல்லாரையும் தூக்கி சாப்பிட்டு போய் இருப்பேன் – விசித்ரா கொடுத்த நச் பதிலடி.

0
2192
- Advertisement -

இதே தமன்னா செய்தால் ஏத்துக்குவீங்க, மற்றவர் செய்தால் இப்படி தானா! என்று மனம் திறந்து நடிகை விசித்ரா அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இதயத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சில்க் ஸ்மிதாவுக்கு பிறகு தமிழ் சினிமாவில் 90 காலகட்டத்தில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் விசித்ரா.இவர் காமெடியின் சம்பவங்களான கவுண்டமணி, செந்தில், வடிவேலு ஆகியோருடன் இணைந்து பல படங்களில் காமெடி காட்சிகளில் நடித்திருக்கிறார்.

-விளம்பரம்-

அதோடு இவர் வில்லியாகவும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து இருக்கிறார். இவர் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக, ரசிகன், முத்து, சுயம்வரம் போன்ற படங்களின் மூலம் இவருடைய நடிப்பு ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றது. அது மட்டும் இல்லாமல் 90 கிட்ஸ் ரசிகர்கள் மத்தியில் இவருக்கென ஒரு தனி இடம் இருக்கிறது என்று சொல்லலாம். பின் சினிமாவில் வாய்ப்புகள் குறை தொடங்கியவுடன் இவர் சின்னத்திரை பக்கம் சென்று விட்டார்.

- Advertisement -

விசித்திரா: குடும்பம்:

இதனிடையே இவர் ஹோட்டல் மேலாளர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது இவருக்கு மூன்று மகன்கள் இருக்கிறார்கள். குடும்பம், குழந்தை என்று ஆனவுடன் இவர் சினிமாவிற்கு குட் பாய் சொல்லிவிட்டார். மேலும், நீண்ட இடைவெளிக்கு பிறகு இவர் மீண்டும் சின்னத்திரை சீரியல்களில் நடிக்க களமிறங்கினார். அந்த வகையில் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மிகப் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான குக் வித் கோமாளி சீசன் 4ல் போட்டியாளராக பங்கு பெற்றிருந்தார்.

-விளம்பரம்-

பிக் பாஸ் சீசன் 7 :

இந்த நிகழ்ச்சியில் இவர் மூன்றாம் இடத்தையும் பிடித்தார். இந்த நிகழ்ச்சியின் மூலம் இவருடைய சமையல் திறமை அனைவருக்கும் தெரிந்தது. அது மட்டும் இல்லாமல் விசித்ரா படிப்பிலும் திறமையானவர்தான். இவர் பிஎச்டி முடித்திருப்பதாக கூறப்படுகிறது. தற்போது இவர் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு இருக்கிறார். முதல் நாளிலிருந்து விசித்ராவின் செயல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை தான் பெற்று வருகிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் விசித்திரா:

அதிலும் ஜோவிகா படிப்பு குறித்து விசித்ரா அறிவுரை செய்ததற்கு சிலர் விமர்சித்தாலும் பலர் அவருக்கு ஆதரவு கொடுத்திருந்தார்கள். தற்போது அவர் சிறப்பாக விளையாடி வருகிறார். இவர் பிக் பாஸ் வீட்டில் நீண்ட நாட்கள் இருப்பார் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் தமன்னா குறித்து விசித்திரா அளித்திருந்த பழைய பேட்டி தான் தற்போது வெளியாகியிருக்கிறது. அதில் அவர், எனக்கு ஆரம்பத்தில் சினிமாவை பற்றி பெரிதாக ஒன்றும் தெரியாது. இதனால் முதல் படத்தில் நான் கிளாமராக நடித்தேன்.. எனக்கு சொன்னதை தான் நான் செய்தேன். அந்த கதாபாத்திரம் பற்றி எல்லாம் எனக்கு எதுவும் தெரியாது.

தமன்னா குறித்து சொன்னது:

என்னை விட 15 வயது அதிகம் உள்ள கதாபாத்திரத்தில் நடித்தேன். அந்த அளவிற்கு அப்போது சினிமா அனுபவமும், சினிமாவை பற்றியும் எதுவும் தெரியாது. இதனாலே எனக்கு கவர்ச்சியான கதாபாத்திரங்களே கிடைத்தது. திரை உலகமும் என்னை அப்படிதான் பயன்படுத்தியது. சில ஆண்டுகள் கழித்து ஏன் கவர்ச்சியான கதாபாத்திரத்தில் நடிக்கிறீர்கள் என்று கேட்டார்கள். இதை தமன்னா செய்தால் ஏற்றுக் கொள்கிறார்கள். நாங்கள் செய்தால் கேள்வி கேட்கிறார்கள் என்று கூறியிருந்தார். தற்போது இதை சோசியல் மீடியாவில் நெட்டிசன்கள் வைரல் ஆக்கி வருகிறார்கள்.

Advertisement