தீபிகா படுகோன், ரித்திக் ரோஷன் நடிப்பு கற்றுக்கொண்ட இடத்தில் என் மகளும் பயிற்சி எடுத்தால் – மகள் குறித்து வனிதா.

0
1842
- Advertisement -

சமீப காலமாக சோசியல் மீடியாவில் சர்ச்சை நாயகியாக இருந்த வனிதா விஜயகுமார் தற்போது தொழிலதிபராக கலக்கி கொண்டு வருகிறார். தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகர் விஜயகுமார் – மஞ்சுளா ஆகியோரின் மகள் தான் வனிதா. ஆரம்பத்தில் இவர் சினிமாவில் சில படங்களில் மட்டும் நடித்தார். திருமணத்துக்கு பின்னர் வனிதா படங்களில் நடிப்பதை நிறுத்தி கொண்டார்.இதையடுத்து குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக வனிதாவிற்கு இரண்டு முறை விவாகரத்து ஏற்பட்டது.

-விளம்பரம்-

அது மட்டுமில்லாமல் தன் தந்தையுடன் பிரச்சனை காரணமாக தன்னுடைய இரண்டு மகள்களுடன் வனிதா தனித்தனியாக வசித்து வருகிறார். மேலும், நீண்ட இடைவெளிக்கு பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் வனிதா கலந்து கொண்டிருந்தார். இந்த நிகழ்ச்சியின் மூலம் தான் வனிதா மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார்.பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு வனிதா அவர்கள் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருந்தார்.

- Advertisement -

தற்போது இவர் படங்கள், சீரியல்கள் என எதையும் விட்டு வைக்காமல் எதாவது ஒன்றை செய்து கொண்டு இருக்கிறார். அந்த வகையில் இவர் காத்து என்ற படத்தில் நடனம் ஆடி இருக்கிறார். இதனை தொடர்ந்து இவர் அனல்காற்று, அந்த கண், சிவப்பு மனிதர்கள், கொடூரன், தில்லிருந்தா போராடு, பிக் கப் டிராப் உட்பட பல படங்களில் கப் பிசியாக நடித்து வருகிறார்.மேலும், இவர் நடிப்பைத் தாண்டி யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார்.

இப்படி ஒரு நிலையில் வனிதாவின் மகள் சினிமாவில் நடிகையாக களமிறங்கி இருக்கிறார். வனிதாவின் மூத்த மகளான ஜோவிகா தான் தற்போது சினிமாவில் களமிறங்க இருக்கிறார். இது குறித்து தெரிவித்துள்ள வனிதா ‘எனது மகள் சினிமாவில் நடிப்பது உறுதி. இதற்காக அவர் மும்பையில் பிரபல நடிப்பு பயிற்சி பள்ளியில் ஒரு வருடம் பயிற்சி எடுத்தார். இதே பள்ளியில் தான் ஹாலிவுட் நட்சத்திரங்கள் பலர் நடிப்பு பயிற்சி எடுத்தனர்.

-விளம்பரம்-

தீபிகா படுகோன் ப்ரீத்தி ஜிந்தா ரித்திக் ரோஷன் வருண் தவான் கியாரா அத்வானி உள்ளிட்ட பலர் பயிற்சி எடுத்தனர். தற்போது என் மகளுக்கு 18 வயது ஆகிறது. சினிமாவில் நாயகியாக நடிப்பதற்கு தமிழ் தெலுங்கு துறையில் இருந்து அழைப்புகள் வந்து கொண்டிருக்கிறது. எந்த கதாநாயகனுடன் முதலில் நடிப்பது என்பதை விட, நல்ல கதாபாத்திரத்தையும் நல்ல கதையிலும் நடிக்க வேண்டும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். நல்ல கதை அமைந்தால் விரைவில் என் மகள் சினிமாவில் நடிக்க தூங்குவார் என்று கூறியிருக்கிறார்.

இது ஒருபுறம் இருக்க வனிதாவின் மகனான ஸ்ரீஹரி கூட நடிப்பில் தான் ஆர்வகமாக இருந்து வருகிறார். ஸ்ரீஹரி ஏற்கனவே சில குறும்படங்கள் மற்றும் ஒரு சில இசை ஆல்பங்களில் நடித்து உள்ளார். விஜயகுமார் – மஞ்சுளாவின் அணைத்து வாரிசுகளும் சினிமாவில் நடிக்க துவங்கிய நிலையில் அருண் விஜய்யின் மகன் கூட ‘ஓ மை டாக்’ படத்தின் மூலம் சினிமாவில் கால் பதித்தார். தற்போது வனிதாவின் மகளும் சினிமாவில் நுழைய இருக்கிறார்.

Advertisement