பிக் பாஸுக்கு பின் ஒரே ஒருவருக்கு மட்டும் நன்றி சொல்லி விக்ரம் போட்ட முதல் பதிவு.

0
322
- Advertisement -

தமிழில் விஜய் டிவியில் பிக் பாஸ் 7 நிகழ்ச்சி தொடங்கி 84 நாட்களை கடந்து இருக்கிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, சுரேஷ், ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள்.

-விளம்பரம்-

இதுவரை இதில் பவா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்னபாரதி, பிரதீப், ஐஷு, கானா பாலா, அக்ஷயா, பிராவோ, ஜோவிகா, அன்னயா, கூல் சுரேஷ் ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர். இப்படி ஒரு நிலையில் கடந்த வாரம் நடைபெற்ற நாமினேஷனில் விசித்ரா, ரவீனா, விக்ரம் ஆகிய மூன்று பேர் மட்டும் நாமினேட் ஆகி இருந்தனர். இதில் ரவீனா அல்லது விக்ரம் ஆகிய இருவரில் யாராவது வெளியேறுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் விக்ரம் வெளியேற்றப்பட்டு இருந்தார். இவர் நிகழ்ச்சி தொடக்கத்திலிருந்து பெரிதாக எந்த ஒரு விஷயத்திலுமே ஈடுபாடுடன் செய்யவில்லை. அதே போல ஆரம்பம் முதலே மாயா மற்றும் பூர்ணிமா ஆகிய இருவரின் எடுபுடி போல செயல்பட்டு வந்தார். இதனாலே இவர் சமூக வலைதளத்தில் கேலிக்கும் உள்ளானர். இதுவே இவரது வெளியேற்றத்திற்கு காரணமாகவும் மாறிவிட்டது.

பிக் பாஸில் இருந்து வெளியேறிய பின்னர் கமல் சாருடன் நின்று விக்ரம் பேசியபோது ‘நான் அர்ச்சனா கிட்ட தான் சண்ட போட்டு இருக்கிறேன். அவர் கிட்ட மட்டும் தான் சண்ட போட்டு இருக்கேன். எல்லார்கூடயும் போட்டு இருந்தா இந்நேரம்’ என்று வெகுளியாக பேசி இருந்தார். அதே போல நீங்களும் நானும் ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்று கமலிடம் சொன்ன போது ‘இப்படி யாரும் வாய்ப்பு கேட்டது இல்லை’ என்று கமலே கேலி செய்தார்.

-விளம்பரம்-

பிக் பாஸில் இருந்து வெளியேறிய பின்னர் விக்ரம் எந்த ஒரு பேட்டியிலும் இன்னும் பங்கேற்க்கவில்லை. இப்படி ஒரு நிலையில் தனது இன்ஸ்டாராம் பக்கத்தில் கமலுக்கு மட்டும் நன்றி தெரிவித்து பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில் ‘ தொடர்ந்து எனக்கு ஆதரவு அளித்து எனக்கு தூணாக இருந்து, எனது வளர்ச்சிக்கு முக்கியமான ஆசானாகவும், வழிகாட்டுதலையும் அளித்த கமல் சாருக்கு மனமார்ந்த நன்றி. கமல் சார் உண்மையிலேயே நீங்கள் இன்ஸ்பிரேஷன் சார்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இது ஓருபுறம் இருக்க இந்த வாரம் நடைபெற்ற நாமினேஷனில் தினேஷ், விஷ்ணு, விஜய் வர்மா, மணி, ரவீனா, மாயா, நிக்சன் என்று பலர் நாமினேட் ஆகி இருக்கின்றனர். இதில் ரவீனா, நிக்சன், மாயா ஆகிய மூவரில் யாராவது வெளியேற வேண்டும் என்பதே பெரும்பாலான ரசிகர்களின் விருப்பம். ஆனால், கண்டிப்பாக மாயா குறைவான வாக்குகள் பெற்றாலும் அவரை பிக் பாஸ் குழு வெளியில் அனுப்பமாட்டார்கள் என்பதே உண்மை

Advertisement