காதலித்து ஏமாற்றியதாக, லண்டன் பெண் அளித்த புகார் – 3 மாதங்கள் கழித்து விக்ரமன் மீது 13 பிரிவிகளில் வழக்குப்பதிவு.

0
372
- Advertisement -

லண்டனில் படித்து வந்த பெண் வழக்கறிஞர் ஒருவர் அளித்த புகாரின் பெயரில் விக்ரமன் மீது பாலியல் வன்கொடுமை, எஸ்சி எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டம், பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உட்பட 13 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர் விக்ரமன். இவர் விசிக மாநில செய்தி தொடர்பாளர். தற்போது சோசியல் மீடியாவில் இவருடைய விவகாரம் தான் ஹாட் டாபிக்காக சென்று கொண்டு இருக்கிறது. இப்படி ஒரு நிலையில் தான் விக்ரமன் மீது கிருபா என்பவர் புகார் கொடுத்து இருந்தார்.

-விளம்பரம்-

உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருபவர் கிருபா முனுசாமி. இவரை விக்ரமன் காதலித்து ஏமாற்றியதாகவும், இவரிடம் விக்ரமன் காசு வாங்கி ஏமாற்றியதாகவும், விக்ரமன் ஐ லவ் யூ என்று சொன்ன ஸ்கிரீன்ஷாட்டையும் வெளியிட்டு சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார். இதை அடுத்து தன் மீது இருக்கும் குற்றச்சாட்டுகளுக்கு எதிராக விக்ரமன் பதிவு ஒன்று போட்டு இருந்தார்.

- Advertisement -

விக்ரமன் அளித்த பேட்டி:

அதில் அவர், என் மீது கிருபா முனுசாமி என்பவர் கூறிய அத்தனை குற்றச்சாட்டுகளை நான் மறுக்கிறேன். இதில் பாதிக்கப்பட்டவன் என்றால் அது நான் மட்டும்தான். என் மீது பழி சுமத்த வேண்டும் என்ற நோக்கில் இப்படி எல்லாம் செய்கிறார். அப்போது அவரிடம் எனது தேவைகளுக்காக பணம் வாங்கியது உண்மைதான். ஆனால், அவருக்கு வாக்கு கொடுத்ததை போலவே பணத்தையும் திருப்பி தந்துவிட்டேன். அதற்கான ஸ்கிரீன்ஷாட்டையும் இதோ இணைத்து இருக்கிறேன் என்று கிருபா எழுதிய காதல் கடிதத்தையும் இணைத்து இருந்தார்.

மேலும் இது தொடர்பாக சோசியல் மீடியாவில் பல சர்ச்சைகள் எழுந்தது. பின் இது குறித்து விக்ரமன் அவர்கள் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் அவர் கிருபா செய்த மோசடி வேலைகளை கூறி இருக்கிறார். அதோடு கிருபா மீது சட்டரீதியாக புகார் அளிப்பதாகவும் விக்ரமன் கூறி இருந்தார். இந்நிலையில் இது தொடர்பாக கிருபா முனுசாமி அவர்கள் பேட்டி ஒன்று அளித்துஇருந்தார். அதில் அவர், இன்று பொதுவெளியில் விக்ரமன் வாய்க்கு வந்தபடி என்ன வேண்டுமானாலும் பேசலாம்.

-விளம்பரம்-

ஆனால், நடந்த உண்மையை யாராலும் மறைக்க முடியாது.இவர் இனிமேல் எந்த பெண்களையும் ஏமாற்றக்கூடாது என்ற நோக்கில் தான் போலீசில் புகார் தரலாம் என்று முடிவு செய்தேன். அதை தெரிந்து கொண்டு தான் மூன்று மாதத்திற்கு முன்னாடி அவர் என்னை சந்தித்து போலீஸுக்கெல்லாம் போகாதே என்று அழுதார். அது மட்டும் இல்லாமல் ரிலேஷன்ஷிப்பில் இருக்கலாம் என்றெல்லாம் சொன்னார். ஆனால், நான் அதையும் மறுத்து விட்டேன்.

ஒரு கட்டத்தில் என்னை மிரட்டவும் செய்தார். கெட்ட வார்த்தைகளால் திட்டினார். பின் நான் கட்சி சார்பில் உதவி கேட்டேன். ஆனால், ஒரு பயனும் இல்லை. திருமாவளவனையே நேரில் சந்தித்து கேட்டும் பிரயோஜனம் இல்லாமல் போனதனால் தான் நான் ட்விட்டரில் இது குறித்து பேச வேண்டிய நிலைமைக்கு வந்தேன் என்று கூறியிருந்தார். இந்த சம்பவம் தொடங்கி 3 மாதங்கள் ஆன நிலையில் தற்போது விக்ரமன் மீது பாலியல் வன்கொடுமை, எஸ்சி எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டம், பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உட்பட 13 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisement