லியோ வெற்றி விழா – நேரு உள் விளையாட்டு அரங்கம் வைத்த செக்

0
372
- Advertisement -

லியோ படத்தின் வெற்றி விழா கொண்டாட்டம் நடைபெற இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கோலிவுட்டில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக ஜொலித்துக் கொண்டிருப்பவர் விஜய். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது மட்டும் இல்லாமல் பாக்ஸ் ஆபீசிலும் இடம் பெறும். ஆனால், இறுதியாக வெளியான பீஸ்ட், வாரிசு ஆகிய படங்களில் பெரும் தோல்வியை தழுவியது.

-விளம்பரம்-

இருப்பினும் வசூல் ரீதியாக அந்த படங்கள் வெற்றி கண்டது. தற்போது விஜய் நடிப்பில் லியோ படம் வெளியாகி இருக்கிறது. மாஸ்டர் படத்திற்கு பின் லோகேஷ் கனகராஜ்- விஜய் கூட்டணியில் லியோ படம் உருவாகி இருக்கிறது. இப்படத்தில் சஞ்சய் தட், த்ரிஷா, கெளதம் மேனன், அர்ஜுன் தாஸ், தாமஸ், மிஸ்கின், மன்சூர் அலி கான் என பலர் நடித்து இருக்கின்றார்கள். இந்த படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது.

- Advertisement -

லியோ படம்:

மேலும், படத்தில் முதல் பாதியே தூள் கிளப்புகிறது என்றும் இரண்டாம் பாதியெல்லாம் வேற லெவல் என்றும் ரசிகர்கள் கூறி இருக்கிறார்கள். குறிப்பாக, படத்தில் விஜய் அன்பான தந்தையாகவும், வில்லன்களை வெறித்தனமாக வேட்டையாடும் மான்ஸ்டர் காட்சிகளிலும் பட்டையை கிளப்பி இருக்கிறார். லியோ படத்தை பார்த்து திரை பிரபலங்கள் பலருமே பாராட்டி கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.

Leo

லியோ வசூல்:

இந்த படம் அதிரடி ஆக்சன் படமாக உருவாகி இருக்கிறது. ரசிகர்கள் மத்தியில் லியோ படம் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. மேலும், உலக அளவில் முதல் நாளில் இந்த படம் 148 கோடி வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது. லியோ படம் ஏழு நாட்களிலேயே 478 கோடி வசூல் செய்திருப்பதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது. நவம்பர் 4 ஆவது வாரத்தில் லியோ திரைப்படம் ஓடிடியில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

-விளம்பரம்-

லியோ வெற்றி விழா:

ஆக மொத்தம் படம் எதிர்பார்த்ததை விட மிகப் பெரிய அளவில் வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால் லியோ வெற்றியை சிறப்பாக கொண்டாட செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ நிறுவனம் முடிவு செய்து இருக்கிறது. இந்த நிலையில் நவம்பர் ஒன்றாம் தேதி சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் வெற்றி விழாவை நடத்த அனுமதி கேட்டு காவல்துறையிடம் தயாரிப்பு நிறுவனம் கடிதம் அளித்து இருக்கிறது. அதில், விழாவில் 6000 ரசிகர்கள் கலந்து கொள்வார்கள். அதற்கேற்ப பாதுகாப்பு ஏற்பாடுகளை வழங்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்கள்.

அனுமதி கடிதம்:

பின் நேரு உள்விளையாட்டு அரங்கு பராமரிப்பாளர்களிடமும் கடிதம் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அந்த கடிதத்தை நேரு உள்விளையாட்டு அரங்க அதிகாரிகள் நிராகரித்து கடிதத்தை ஈமெயிலில் அனுப்புமாறு அறிவுறுத்தி இருக்கிறார்கள். பின் மீண்டும் அனுமதி கடிதத்தை இமெயில் மூலம் அனுப்பப்பட்டிருக்கிறது. ஏற்கனவே லியோ படத்தின் இசை வெளியீட்டு விழாவை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடத்த படக்குழு திட்டமிட்டு இருந்தது. ஆனால், பாதுகாப்பு காரணமாகத்தான் விழாவை நிறுத்தி விட்டார்கள். தற்போது லியோ படத்தின் வெற்றி விழா கொண்டாட இருக்கும் தகவல் வெளியானதை தொடர்ந்து ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.

Advertisement