விஜய் டிவியில் பிக் பாஸ் 7 நிகழ்ச்சி தொடங்கி 60 நாட்களை கடந்து இருக்கிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள். இதில் அனன்யா, பவா, விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்னபாரதி, பிரதீப், ஐஷு, கானா பாலா, பிராவோ, அக்ஷ்யா ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர்.
மேலும், கடந்த வாரம் கொடுத்த மூன்று பூகம்ப டாஸ்கில் இரண்டு டாஸ்கில் போட்டியாளர்கள் தோற்றதால் இரண்டு வைல்ட் கார்ட் போட்டியாளர்கள் உறுதியானது. அந்த வகையில் ஏற்கனவே பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய விஜய் வர்மா மற்றும் அனன்யா wild Card போட்டியாளர்களாக உள்ளே நுழைந்து இருக்கின்றனர். வழக்கம் போல் பிக் பாஸ் வீட்டில் டாஸ்குகள் கொடுக்கப்பட்டு இருக்கிறது. மேலும், இந்த நிகழ்ச்சியில் பரிச்சயமான நபர்களில் விஷ்ணு ஒருவர்.
பிக் பாஸ் 7:
நிகழ்ச்சி ஆரம்பத்திலிருந்து விஷ்ணு தனக்கு மக்கள் மத்தியில் பிரபலம் அதிகமாக இருப்பதை நினைத்துக் கொண்டு திமிராகவும் அடாவடித்தனமாகவும் நடந்து கொள்கிறார். குறிப்பாக, இவர் ஆண்களிடம் சண்டை போடுவதை விட பெண்களிடம் தான் அதிகம் தன்னுடைய வீரத்தை காண்பித்து வருகிறார். அந்த வகையில் கடந்த வாரம் தினேஷ் இடம் விஷ்ணு வாக்குவாதத்தில் ஈடுபட்டு அடிதடி வரை சென்றது. மேலும், இந்த வாரத்திற்கு கேப்டன் தேர்வு நடைபெற்ற போதில் இருந்து விஷ்ணு உடைய செயல்களில் மாற்றம் ஏற்பட்டு இருக்கிறது.
நிகழ்ச்சியில் விஷ்னு:
அதிலும் நிக்சன் கேப்டன் ஆனதை அடுத்து விஷ்ணுவால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இதனால் இவர் பல இடங்களில் தன்னுடைய கோபத்தை காண்பித்து இருக்கிறார். அதோடு விஷ்ணு இந்த சீசனின் டைட்டில் வின்னர் தான் என்று நினைத்துக் கொண்டு மற்ற போட்டியாளர்களுடன் சர்ச்சையில் ஈடுபட்டு இருக்கிறார். அவர் இந்த வாரம் அர்ச்சனாவை வம்பு இழுத்திருக்கிறார். அர்ச்சனா மீது கை தூக்கி பளார் பளார் என்று அறைந்திடுவேன் என்றெல்லாம் பேசி இருந்தார். இது ரசிகர்கள் மத்தியில் கடுப்பேற்றி இருக்கிறது.
விஷ்ணுக்கு பெயர் வைத்தவர்:
இதை நிகழ்ச்சியில் விஷ்ணு வேணுமென்றே சண்டை போடுகிறாரா? எதார்த்தமாக நடந்ததா? குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி இருக்கிறது. விஷ்ணுவின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் மீடியாவை சம்பந்தப்பட்டவர்களே கிடையாது. ஆனால், இவருக்கு பெயர் வைத்ததே காதல் மன்னன் ஜெமினி கணேசன் தான். ஜெமினி கணேசன் சாரும், விஷ்ணு தாத்தாவும் நெருங்கி நண்பர்கள். அவர் பெயர் வைத்த ராசியினால் தான் இவர் சினிமாவிற்குள் வந்துவிட்டார். இவர் இதற்கு முன்பு இரண்டு முறை பிக் பாஸ் வீட்டிற்குள் செல்ல முயற்சி செய்திருந்தார். ஆனால், இந்த முறை தான் வாய்ப்பு கிடைத்தது.
விஷ்ணு குறித்த தகவல்:
பிக் பாஸ் மூலம் தன்னுடைய கேரியர் மாறும் என்ற நம்பிக்கையில் விஷ்ணு இருக்கிறார். இவர் பிக் பாஸ் வீட்டில் தன்னை தக்க வைத்துக் கொள்வதற்காக தான் இல்லாத ஒன்றை கூட கண்டென்ட்டாக கொடுத்து பெரிதாக செய்கிறார். இவர் பிக் பாஸ் வீட்டின் டைட்டில் வின்னர் ஆக வேண்டும் என்று தான் பல வேலைகளை செய்து கொண்டிருக்கிறார். இவர் பிக் பாஸ் வீட்டிற்குள் செய்து கொண்டிருப்பதெல்லாம் முழுக்க முழுக்க கேம் ப்ளான் என்று அவருடைய நண்பர்கள் கூறுகிறார்கள். தற்போது இவர் ஒரு படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இவர் இறுதி வரை செல்வாரா? இல்லையா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.