‘எங்களுக்குள் ஈகோவே கிடையாது’ 90ஸ் கிட்ஸின் ஃபேவரைட் டிவி நடிகர்களின் Get together.

0
176
actors
- Advertisement -

90களின் ஃபேவரட் சீரியல் நடிகர்களின் கெட் டு கெதர் புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டாகி வருகிறது. மக்களின் பொழுது போக்கு அம்சங்களில் ஒன்றாக சின்னத்திரை சீரியல்கள் விளங்குகிறது. இதனால் ஒவ்வொரு சேனலும் தங்களுடைய சேனலின் டிஆர்பி ரேட்டிங்காக வித்தியாசமான கதைக்களத்துடன் தொடர்களை ஒளிபரப்பி வருகிறார்கள். அதிலும் 90 காலகட்டத்தில் ஒளிபரப்பான தொடர்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்திருக்கிறது.

-விளம்பரம்-

இந்நிலையில் 90களில் புகழ்பெற்ற சீரியல் நடிகர்கள் எல்லோரும் சேர்ந்து கெட் டு கெதர் பார்ட்டி நடத்தி இருக்கிறார்கள். தற்போது கெட் டு கெதரில் எடுத்த புகைப்படங்கள் எல்லாம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மேலும், கெட் டு கெதர் பார்ட்டியில் கலந்த நடிகர்கள் பேட்டியில் கூறியிருந்தது, ரொம்ப நாளாகவே இந்த மாதிரி ஒரு கெட் டு கெதர் வைக்கணும் என்று பேசிக்கொண்டிருந்தோம். சூழ்நிலை காரணமாக தள்ளிக்கொண்டு போனது.

- Advertisement -

ஆனால், திடீரென்று முடிவு பண்ணி பத்தே நாளில் எல்லாத்தையும் ப்ளான் பண்ணி வைத்து விட்டோம். இந்த மீட்டிங் டி.நகரில் நடத்த முடிவு செய்தோம். நிஷா வெங்கட் தான் ஆரம்பத்தில் புகைப்படங்கள் எல்லாத்தையும் ஒருங்கிணைக்க உதவியாக இருந்தார். பிறகு கௌசிக்கும், அம்முவும் எல்லோரையும் ஒருங்கிணைத்தார். இந்த கெட் டு கெதர் பொறுத்தவரை இவர்கள் தான் சொல்லணும், அவர்கள் தான் சொல்லனும் என்று எதுவுமே இல்லை. எல்லோருமே ஆர்வத்தில் இதை பண்ணினோம். இதில் என்ன ஒரு ஸ்பெஷல் என்றால் 80ஸ், 90ஸ், 2000ல் பிரபலமான நடிகர்கள் கூட இந்த டீமில் இருந்தார்கள்.

மிக அழகாக இந்த ரியூனியன் இருந்தது. இந்த தருணத்தை எல்லோருமே மிஸ் பண்ணாமல் என்ஜாய் பண்ணோம். இப்ப இருக்குற போட்டியான மீடியா உலகில் ஆர்ட்டிஸ்டுகள் இந்த அளவிற்கு நண்பர்களாக இருப்பார்களா? என்று எனக்கு தெரியாது. ஆனால், எல்லோரும் அவ்வளவு உரிமையாக பழகினார்கள். எங்களுக்குள் எந்தவித ஈகோவும் இல்லை. ஒரு சின்ன மைனஸ் கூட கிடையாது. ஒரு மூன்று, நான்கு மணி நேரம் சந்தோஷமாக டான்ஸ், பாட்டு, காமெடி என்று என்ஜாய் பண்ணினோம். இந்த சந்தோஷம் இன்னும் ஒரு வருஷத்துக்கு எங்கள் மத்தியில் இருக்கும்.

-விளம்பரம்-

ஆகஸ்ட் 14 இந்த கெட் டு கெதர் பண்ணலாம் என்று பிளான் பண்ணினோம். ஆனால், அன்று காலையில் சின்னத்திரை எலக்ஷனில் வெற்றி பெற்ற நடிகர்களுக்கு பதவி ஏற்பு விழா இருந்தது. அதை முடித்துவிட்டு அவசரஅவசரமாக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டோம். இதில் சிலரால் வர முடியாமல் போனதை நினைத்து கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. இந்த கெட் டு கெதர் விழாவில் ஆண்களுக்கு கருப்பு நிற ட்ரஸ், பெண்கள் சிவப்பு நிற ட்ரஸ் போட்டுட்டு வந்தார்கள். நீண்ட வருடங்களுக்கு பிறகு 90களில் நடித்த நடிகர்கள் எல்லோரும் சந்தித்தது ரொம்ப சந்தோஷமாக இருந்தது.

அந்த காலம் கோல்டன் காலம் என்றே சொல்லலாம். இன்றைக்கும் பலரும் மெகாசீரியல் என்று சொல்கிறார்கள். ஆனால், உண்மையிலேயே மெகா என்கிற கான்செப்ட் 90களின் காலகட்டத்தில் தான் வந்தது. ரொம்ப வருடம் கழித்து பார்க்காத பலரையும் நேரில் சந்திப்பதில் சந்தோஷமாக இருக்கிறது. மலரும் நினைவுகள் பல நினைவுக்கு வந்துபோனது. உண்மையான நட்பு காலங்கள் கடந்தாலும் அப்படியே எங்களுக்குள் இருந்தது. ஃபேமிலி கெட் டு கெதர் மாதிரியான உணர்வு தான் எல்லோருக்குள்ளும் இருந்தது என்று கூறியிருந்தார்கள்.

Advertisement