அஜித்துக்கு எடுத்து சொல்லுங்க.! நேரலையில் ரசிகரின் கேள்விக்கு பதில் கூறிய யாஷிகா ஆனந்த்.!

0
367

இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற அடல்ட் காமெடி படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் அறியப்பட்டவர் நடிகை யாஷிகா ஆனந்த். அதன் பின்னர் விஜய் தொலைக்காட்சியில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார் யாஷிகா. யோகி பாபுவுடன் ‘ஜாம்பி’ என்ற படத்திலும் மஹத்துடன் ஒரு படத்திலும் நடித்து வருகிறார். எப்போதும் சமூக வலைதளத்தில் ஆக்ட்டிவாக இருக்கும் யாஷிகா சமீபத்தில் ட்விட்டரில் லைவ் சாட்டில் வந்தார்.

அப்போது ரசிகர் ஒருவர், நீங்கள் அஜித்துடன் நடிக்க வேண்டும் என்று கூற, அதற்கு யாஷிகா ‘நீங்கள் அவரிடத்தில் போய் சொல்லுங்க, அவருடன் நடிக்க நான் நடிக்க மிகவும் ஆசை படுகிறேன் என்று. அப்போதுவது அவர் கேட்பார்’ என்று பதில் கூறியுள்ளார்.