விபத்தில் சிக்கி தீவிர சிகிச்சையில் இருந்து வரும் யாஷிகா மீது 3 பிரிவுகளில் வழக்கு. என்ன காரணம் தெரியுமா ?

0
1564
Yashika
- Advertisement -

சென்னை, மாமல்லபுரம் அருகே நடந்த கார் விபத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் படுகாயகங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழில் துருவங்கள் 16, கவலை வேண்டாம் போன்ற படங்களில் நடித்த யாஷிகா, பின்னர் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் பிரபலமடைந்தார். அதன் பின்னர் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்றார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் இவருக்கு ஏகப்பட்ட பட வாய்ப்புகள் வந்த வண்ணம் இருக்கிறது.

-விளம்பரம்-

இந்த நிலையில் சமீபத்தில் ஏற்பட்ட கார் விபத்தில் இவர் படு காயம் அடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் நடிகை யாஷிகா தனது காரில் தனது இரண்டு ஆண் நண்பர்கள் மற்றும் ஒரு பெண் தோழியுடன் பாண்டிச்சேரிக்கு சென்று பின்னர் நேற்று சென்னை திரும்பியுள்ளார்.

இதையும் பாருங்க : அவர் தாடிய ட்ரிம் பண்றதுக்கு இந்தியால ஆயிரம் பேர் இருக்காங்க. ஆனா ஏன் வளக்குராரு தெரியுமா? – அண்ணாமலையின் எமோஷனல் பேச்சு.

- Advertisement -

மாமல்லபுரத்தில் இருந்து சென்னையை நோக்கி நடிகை யாஷிகா காரில் வந்த போது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை தடுப்பில் மோதி பல்லத்தில் விழந்து உள்ளது. இதில் முன் சீட்டில் அமர்ந்து இருந்த யாஷிகாவின் தோழி வள்ளி என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும், மேலும் யாஷிகா அவரது இரண்டு நண்பர்களும் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

இதில் யாஷிகாவிற்கு ஆனந்துக்கு கை, கால், இடுப்பு எலும்பில் முறிவு ஏற்பட்டுள்ளது. யாஷிகாவிடம் விசாரிக்கப்பட்டுள்ள போது காரை தான் தான் ஒட்டி வந்ததாக கூறியுள்ளார். இதனால் அதிவேகமாக கார் ஓட்டியதாகவும், மரணத்தை ஏற்படுத்தியதாகவும் யாஷிகா ஆனந்த் மீது இரண்டு வழக்குகள் பதியப்பட்டுள்ளது. குடித்துவிட்டு வாகனம் ஓட்டியிருக்கலாம் என்கிற சந்தேகங்கள் எழுப்பப்பட்ட நிலையில் குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதாக எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை.

-விளம்பரம்-
Advertisement