அவர் தாடிய ட்ரிம் பண்றதுக்கு இந்தியால ஆயிரம் பேர் இருக்காங்க. ஆனா ஏன் வளக்குராரு தெரியுமா? – அண்ணாமலையின் எமோஷனல் பேச்சு.

0
815
annamalai

பிரதமர் மோடி ஏன் தாடி வளர்க்கிறார் என்று பாஜக தலைவர் அண்ணாமலை பேசிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பிறவி வருகிறது. அண்ணாமலை பா ஜ கவில் சேர்ந்த நாள் முதலே அவரை பல எதிர் கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் அடிக்கடி அண்ணாமலையும் ஏதாவது ஒரு செயலால் கேலிக்கு உள்ளாகிவிடுகிறார். கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அண்ணாமலையை பா ஜ கவை சேர்ந்த செந்தில் வேல் ‘சின்ன சங்கி’ என்று கூறிஇருந்தது பலரும் ட்ரோல் செய்யப்பட்டு இருந்தது.

இந்நிலையில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று காலக்கட்டத்தில் பிரதமர் மோடி எதற்காக தாடி வளர்த்தார் என்பது குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விசித்திரமான விளக்கம் ஒன்றைக் கொடுத்து இருப்பது பலரின் கேலிக்கு உள்ளாகி இருக்கிறது. சமீபத்தில் கட்சி கூட்டம் ஒன்றில் பேசிய அண்ணாமலை, கொரோனா காலத்தில் மோடி, தன்னோட வலியைக் காட்டுறதுக்காகத் தான் தாடி வளர்த்தார். மோடியோட தாடிய டிரிம் பண்றத்துக்கு இந்தியாவுல ஆயிரம் பேர் இருக்காங்க.

இதையும் பாருங்க : நிறைவேற போகும் தந்தையின் ஆசை. சினேகனுக்கு விரைவில் திருமணம். பெண் இந்த சீரியல் நடிகை தானமே ?

- Advertisement -

இருந்தாலும் அவர் தன்னோட வேதனைய காட்டுறதுக்கு தாடி வளர்த்திருக்காரு.எதற்காக ? அதன் மூலமா நமக்கு ஒரு மெஸேஜ சொல்றாரு. ஒவ்வொரு இந்தியனும் கொரோனா காலத்தில அனுபவிக்கிற வலியை நானும் அனுபிவிக்கிறேன்னு காட்டுறதுக்குத் தான் அவர் தாடி வளர்த்திருக்காரு என்று பேசி இருந்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

அண்ணாமலையின் இந்த பேச்சை சமூக வலைதளத்தில் பலரும் கேலி செய்து வருகின்றனர். அதில் ட்விட்டர் வாசி ஒருவர், கொரோனாவில்.. ஆக்சிஜன் இல்லாமல் ஹாஸ்படல் படுக்கை இல்லாமல் மருந்து இல்லாமல் வேக்சின் இல்லாமல் எரிக்க சுடுகாடு இல்லாமல் சாப்பிட உணவு இல்லாமல்.. மக்கள் மாண்டு கொண்டிருந்த பொழுது.. பிரதமர் மோடி என்ன செய்து கொண்டிருந்தார் என்ற உண்மையை நம் அண்ணாமலை விளக்கமாக கூறியுள்ளார் அவருக்கு நன்றி என்று பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement