அஜித் மச்சானுடன் அடிக்கடி வெளியான யாஷிகாவின் புகைப்படம் – அட, இது தான் மேட்டாரா ?

0
530
- Advertisement -

ரிச்சர்ட்- யாஷிகா ஆனந்த் இணைந்து நடிக்கும் படம் குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் ரிச்சர்ட். இவர் பிரபல நடிகை பேபி ஷாலினியின் அண்ணனும், அஜித்தின் மைத்துனர் ஆவார். அஞ்சலி படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் ரிச்சர்ட். பின் இவர் 2002 ஆம் ஆண்டு வெளியான காதல் வைரஸ் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். ஆனால், இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு அமையவில்லை.

-விளம்பரம்-

பின் இவர் பல படங்களில் நடித்தாலும் சினிமாவில் இவருக்கு என ஒரு நிலையான அங்கீகாரம் கிடைக்கவில்லை. கடைசியாக 2016 ஆம் ஆண்டு வெளியான அந்தமான் என்ற படத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் இவர் வேறு எந்த தமிழ் படத்திலும் நடிக்கவில்லை. பின்னர் நான்கு ஆண்டுகள் இடைவெளிக்குப் பின்னர் திரௌபதி படத்தின் மூலம் ஒரு மாஸ் என்ட்ரி கொடுத்து இருந்தார் ரிச்சர்ட்.

- Advertisement -

ரிச்சர்ட் திரைப்பயணம்:

பழைய வண்ணாரப்பேட்டை படத்தை இயக்கிய இயக்குனர் மோகன் ஜி ‘திரௌபதி’ படத்தை இயக்கினார். இந்த படத்தில் ஹீரோவாக ரிச்சர்ட் நடித்து இருந்தார். இந்த படம் பெரிய அளவு பட்ஜெட் இல்லை என்றாலும் வசூலில் படத்தின் பட்ஜெட்டை முந்தியது. இந்த படத்தை தொடர்ந்து மீண்டும் மோகன் ஜி இயக்கத்தில் ருத்ர தாண்டவம் படத்தில் நடித்து இருந்தார். இந்த படமும் கலவையான விமர்சனத்தை பெற்றது.

ரிச்சர்ட் நடித்த படங்கள்:

இதனை தொடர்ந்து இவர் மீண்டும் மோகன் ஜி இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இதுதொடர்பான அறிவிப்பை ஏற்கனவே மோகன் ஜி அறிவித்து இருந்தார். ஆனால், இந்த படம் குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை. சில மாதங்களுக்கு முன்பு யாஷிகா- ரிச்சர்ட் இருவரும் இணைந்திருந்த படங்கள் தான் சோசியல் மீடியாவில் சர்ச்சை கிளப்பி இருக்கிறது. மேலும், இருவரும் காதலிக்கிறார்கள், கூடிய விரைவில் திருமணம் செய்து கொள்ளுகிறார்கள் என்றெல்லாம் வைரலாகி இருந்தது.

-விளம்பரம்-

ரிச்சர்ட்-யாஷிகா நடிக்கும் படம்:

ஆனால், இருவருமே இதை மறுத்து படத்தின் காண ப்ரொமோஷன் என்று கூறினார்கள். இந்த நிலையில் ரிச்சர்ட் – யாஷிகா இருவரும் இணைந்து நடிக்கும் படம் குறித்த தகவல் தான் தற்போது வைரலாகி வருகிறது. ‘சில நொடிகளில்’ என்ற படத்தில் ரிச்சர்ட் – யாஷிகா நடித்து வருகிறார்கள். இப்படத்தினை கன்னட இயக்குநர் வினய் பரத்வாஜ் இயக்குகிறார். ‘ஜீன்ஸ்’, ‘தாம் தூம்’, ‘கோச்சடையான்’ படத்தை தயாரித்த முரளி மனோகர் தயாரிக்கிறார்.

படம் குறித்த தகவல்:

இந்த படத்தில் புன்னகை பூ கீதா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். திருமணம் ஆன தம்பதியரின் வாழ்க்கையை சுற்றி நடக்கும் கதையை திரில்லர் பாணியில் இயக்குனர் கொடுத்திருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து தற்போது தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்கு ரோஹித் குல்கர்ணி பின்னணி இசை அமைத்திருக்கிறார். இந்த படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் கூடிய விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement