அவர் வார்த்தைக்கு கொஞ்சம் மரியாதை கொடுங்க – யாஷிகாவின் ட்வீட்டால் கடுப்பான AK ரசிகர்கள்

0
335
ajith
- Advertisement -

தன்னை இனி ‘தல’ என்று அழைக்க வேண்டாம் என்று அஜித் வெளியிட்ட அறிக்கையை தொடர்ந்து கிரிக்கெட் உலகில் தல என்று அழைக்கப்படும் தோனியின் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் அஜித். இவரது ரசிகர்கள் இவரை எப்போதும் ‘தல’ என்று தான் அழைத்து வருகின்றனர். அஜித் ரசிகர்களை பொறுத்த வரை ‘தல’ என்றால் அது அஜித் மட்டும் தான். அதனால் தோனியை ‘தல’ என்று குறிப்பிட்டு கூறுவதை அவர்கள் ஒருபோதும் ஏற்றுக்கொண்டது இல்லை.

-விளம்பரம்-
Image

ஒவ்வொரு முறை தோனியை தல என்று அழைக்கும் போதும் அஜித்தின் ரசிகர்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். அதிலும் பிரபலங்கள் யாரவது தோனியை ‘தல’ என்று புகழ்ந்துவிட்டால் அவ்வளவு தான் அவர்களை சமூக வலைதளத்தில் நாறடித்துவிடுவார்கள். இப்படி ஒரு நிலையில் அஜித் தனக்கு ‘தல’ என்ற பட்டம் வேண்டாம் என்று அறிவித்து இருப்பது அஜித் ரசிகர்கள் மத்தியில் பேரிடியாக அமைந்து இருக்கிறது.

- Advertisement -

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘ இனிவரும் காலங்களில் என்னைப் பற்றி எழுதும் போதோ அல்லது பேசும்போதோ எனது இயற்கை பெயரான அஜித்குமார், அஜித், ஏகே என குறிப்பிட்டால் போதுமானது. தல என்றோ அல்லது வேறு ஏதாவது பட்டை பெயர்களை குறிப்பிட்டு அழைக்க வேண்டாம். இது என்னுடைய அன்பான வேண்டுகோள்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

ஆனாலும் அஜித் ரசிகர்கள் எங்களுக்கு தல என்றால் அது அஜித் மட்டும் தான் என்று கூறிக் கொண்டுதான் வருகிறார்கள் இப்படி ஒரு நிலையில் பிக் பாஸ் போட்டியாளர் நடிகையுமான யாஷிகா அஜீத்தின் இந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரத்திலேயே தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தல அஜித் என்று குறிப்பிட்டு ட்வீட் போட்டிருந்தார் இதை பார்த்த பலர் அஜித் எப்போதும் தல தான் கூறி வருகின்றனர.

-விளம்பரம்-

இருப்பினும் ஒரு சில ரசிகர்கள் உங்களுக்கு மிகவும் பிடித்த நடிகருக்கு நீங்கள் கொடுக்கும் மரியாதை இதுதானா. அவர் அவ்வளவு சொல்லியும் இன்னமும் அவரது பேச்சை கேட்காமல் இப்படி செய்வது என்ன அர்த்தம். அஜித் சாரின் வார்த்தைக்கு மரியாதை கொடுங்கள் என்று கூறி வருகின்றனர்.

Advertisement