திரையுலகத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள விசயத்திற்கு போட்டி வைத்து பரிசளித்த யாஷிகா.

0
1003
yashika

தமிழ் சினிமாவில் இரட்டை ஆர்த்த அடல்ட் காமெடி படமாக வெளியான ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தின் மூலம் தமிழ் இளசுகள் மத்தியில் பெரும் பிரபலமடைந்தவர் நடிகை யாஷிகா. இந்த படத்திற்கு முன்பாகவே இவர் ஒரு சில படங்களில் நடித்திருந்தார். ஆனால், இவருக்கு பெரும் பிரபலத்தை ஏற்படுத்தி கொடுத்தது பிக் பாஸ் நிகழ்ச்சி தான். இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் அம்மணி பல்வேறு படங்களில் நடித்து வருகிறார்.

எப்போதும் சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் யாஷிகா சமீபத்தில் தனது சமூக வலைதளத்தில் போட்டி ஒன்றை வைத்திருந்தார். அதில் #LetsOtt என்ற ஹேஷ் டேக்கை பயன்படுத்தி ட்வீட் செய்து அதில் வெற்றிபெற்றவர்களுக்கு அமேசான், நெட்ப்ளிக்ஸ் போன்ற OTT தளங்களின் ஒருவருட சந்தாவை இலவசமாக வழங்கியுள்ளார். யாஷிகாவின் இந்த செயல் OTT தளங்களை ஆதரிப்பது போன்றே இருக்கிறது.

இதையும் பாருங்க : பிக் பாஸ்- 4 பட்டியல்ல இந்த டிக் டாக் புயலும் இருக்காங்களா ? அப்போ இளசுகளுக்கு குஷி தான்.

- Advertisement -

உலகமெங்கும் தற்போது ‘கொரோனா’ எனும் வைரஸ் தீயாய் பரவி வருகிறது. ஆகையால், ‘144’ போடப்பட்டுள்ளது. தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. ‘கொரோனா’ பிரச்சனை முடிந்து எப்போது அனைத்து திரையரங்குகளும் திறக்கப்படும் என்பது பெரிய கேள்விக் குறியாக இருக்கிறது. இந்நிலையில், பிரபல நடிகை ஜோதிகா நடித்திருக்கும் ‘பொன்மகள் வந்தாள்’ படத்தின் டிஜிட்டல் ரைட்ஸை பிரபல டிஜிட்டல் பிளாட்ஃபார்மான ‘அமேசான் ப்ரைம்’-யிற்கு ரூ.9 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் பட்ஜெட் ரூ.4 1/2 கோடியாம். ஆனால், தயாரிப்பு நிறுவனத்திற்கு டிஜிட்டல் பிளாட்ஃபார்மிற்கு விற்றதால் அதிக லாபம் கிடைத்து விட்டதாம். அதே அதே போல விஜய்யின் மாஸ்டர் படத்தை கூட OTT வெளியிட தீவிர முயற்சிகளை செய்து வருகிறது சில ஆன் லைன் நிறுவனங்கள். இருப்பினும் திரைப்படங்களை OTT தளத்தில் வெளியிட சினிமா துறையில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில் யாஷிகா இப்படி OTT தளங்களை ஆதரிக்கும் விதமாக செய்துள்ள இந்த காரியத்தால் தயாரிப்பாளர்களும், திரையரங்க உரிமையாளர்களும் யாஷிகா மீது கோபம் கொள்ளாமல் இருந்தால் சரி.

-விளம்பரம்-
Advertisement