மீண்டும் ஜூலி வெளியிட்ட புகைப்படம்.! சரமாரியாக கிண்டல் செய்த நெட்டிசன்ஸ்.!

0
858
Julie

கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் மக்கள் மத்தியில் சர்சைக்குரிய நபராகவும், மிகவும் வெறுக்கப்ட்ட நபராகவும் இருந்தவர் ஜூலி. ஜல்லிக்கட்டு போராட்டத்தில் நல்ல பெயரை எடுத்த ஜூலி பிக் பாஸ் நிகழ்ச்சியில் பெயரை டேமேஜ் செய்து கொண்டார்.

இருப்பினும் டிவி விளம்பரங்கள், தொலைக்காட்சி தொகுப்பாளினி என்று கலக்கி வந்த ஜூலி, ஒரு சில படங்களிலும் கதநாயகியாகி நடித்து வருகிறார். சமீப காலமாக ஜூலி அந்தமானில் BMW சொகுசு காரில் லாங் ட்ரைவ், ஸ்குபா டைவிங் என்று வித விதமான புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.

அதுமட்டுமல்லாமல் தனது நெருங்கிய நண்பர் என்று ஒரு ஆணுடன் மிகவும் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் ஒன்றையும் பதிவிட்டார் ஜூலி. பின்னர் ‘அந்த நபர் தனது நெருங்கிய நண்பரென்றும் அவருடன் தான் நான் அந்தமானில் ஜாலியாக இருந்தேன்’ என்று குறிப்பிருந்தார் ஜூலி.

ஜூலி, சமீபத்தில் அந்தமானில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதனை ட்விட்டர் வாசிகள் அனைவருமே கலாய்த்து வந்தனர். இந்நிலையில் தற்போது ஜூலி கப்பலில் இருப்பது போன்ற ஒரு புகைப்படத்தை பதிவிட்டிருந்தார். அந்த புகைப்படம் மட்டும் விதி விலக்கா என்ன, தற்போது அந்த புகைப்படமும் ட்விட்டர் வாசிகள் கிண்டல் செய்யப்பட்டு வருகிறது.