விஜய் ஸ்டைலில் யாருக்கும் தெரியாமல் இரவு நேரத்தில் சென்று உதவி செய்த சூர்யா..!

0
969
surya
- Advertisement -

சேலம் மாவட்டம் ஆத்தூர் ஜோதி நகரை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 35). இவர் அங்குள்ள டீக்கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். சூர்யாவின் நற்பணி இயக்கத்தின் சேலம் கிழக்கு மாவட்ட தலைவராக இருக்கும் இவர் கடந்த 13-ந் தேதி நுரையீரல் பாதிப்பு காரணமாக மரணம் அடைந்தார்.

-விளம்பரம்-

- Advertisement -

சமீபத்தில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது உயிரிழந்த குடும்பத்தினரை நடிகர் விஜய் இரவு நேரத்தில் நேரில் சந்தித்து அவர்களது குடும்பத்திற்கு நிதியுதவியை அளித்து வந்தார்.

தற்போது அதே ஸ்டைலில் நடிகர் சூர்யா, கடந்த 13 ஆம் தேதி உயிரிழந்த மணிகண்டன் குடும்பத்தினரை நேற்ற(அக்டொபேர் 28) இரவு 10 மணி அளவில் யாருக்கும் தெரியாமல் மணிகண்டன் வீட்டிற்கு சென்று அவர்களுக்கு ஆறுதல் அளித்துள்ளார்.

-விளம்பரம்-

மேலும், மணிகண்டன் குடும்பத்தாருக்கு ஆறுதல் சொன்ன சூர்யா, இந்த குடும்பம் இனி என்னுடைய குடும்பம், அனைத்து தேவைகளையும் நான் உங்களுக்கு செய்து வைக்கிறேன். உங்கள் பிள்ளையை நான் படிக்க வைக்கிறேன் என்றும் ஆறுதல் கூறியுள்ளார். இதனை கேட்ட மணிகண்டன் குடும்பத்தினர் கண்ணீர் விட்டு அழுதுள்ளனர்.

Advertisement