தினேஷ் மீது எப்படி என்ன தீரா கோபம், ரஷிதாவின் புகார்கள். நட்பு வட்டாரம் சொல்லும் தீர்வு.

0
345
- Advertisement -

ரக்ஷிதா -தினேஷின் பிரிவு குறித்த காரணம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சில மாதங்களாகவே ரக்ஷிதா- தினேஷ் உடைய விவகாரம் தான் சோசியல் மீடியாவில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. சின்னத்திரை சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனவர் நடிகை ரக்ஷிதா. இவருக்கு சீரியல் நடிகர் தினேஷ் என்பவருடன் திருமணம் ஆனது. ஆனால், இவர்களுக்கு குழந்தைகள் எதுவும் இல்லை. இப்படி ஒரு நிலையில் ரக்ஷிதா தன் கணவரை விட்டு பிரிந்து தனியாக வாழ்கிறார் என்று சோசியல் மீடியாவில் வெளியாகி இருந்தது. இது குறித்து பலரும் பலவிதமான கருத்துக்களை பதிவிட்டு வந்தனர். ஆனால், இவர்கள் இருவரும் சட்டபூர்வமாக பிரியவில்லை. மேலும், ரக்ஷிதா பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்த போது அவருக்கு ஆதரவாக தினேஷ் பேசி இருந்தார்.

-விளம்பரம்-

இதனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிறகு இருவருக்கும் இடையே பிரச்சனை சரியாகிடும் என்று பார்த்தால் சரியாகவில்லை . இவர்களின் பிரிவு குறித்து சோசியல் மீடியாவில் அதிகமாக பேசப்பட்டது.
பலரும் இவர்களை சேர்த்து வைக்க முயற்சி செய்தார்கள். எல்லாம் தோல்வியில் தான் முடிந்தது. பின் சில மாதங்களுக்கு முன் இவர்கள் இருவரின் பஞ்சாயத்து போலீஸ் ஸ்டேஷன் வரை சென்றது. தினேஷ் மீது ரக்ஷிதா புகார் கொடுத்து இருந்தார். பின் இருவரையுமே போலீசார் விசாரித்து முறையாக விவாகரத்து செய்ய சொல்லி இருக்கிறார்கள். இருந்தும் தினேஷ் தன்னுடைய மனைவியுடன் சேர்ந்து வாழ ஆசைப்படுகிறார். தற்போது தினேஷ் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார்.

- Advertisement -

இதில் அவருடைய மனைவிக்காக தான் கலந்து கொண்டிருப்பதாகவும், டைட்டிலை அவருக்காக பரிசளிப்பேன் என்றெல்லாம் கூறியிருந்தார். இதைப் பார்த்த தினேஷ்- ரக்ஷிதா ரசிகர்கள் இவர்கள் இருவரும் சேர்ந்து வாழ வேண்டும் என்றெல்லாம் கூறி வருகிறார்கள். ஆனால், போன சீசன்னில் கலந்து கொண்ட ரக்ஷிதா தன்னுடைய கணவரை குறித்து எதுவுமே பேசவில்லை. அதோடு தினேஷ் , எங்களுடைய பிரச்சனையின் முடிவு பாசிட்வ்வாக தான் இருக்கும் என்று கூறி இருந்தார். இதற்கு ரக்ஷிதா, வாய்ப்பில்லை என்பது போல பதிவு போட்டிருந்தார். இதற்கு பலருமே தினேஷ் இவ்வளவு இறங்கியும் ஏன் ரக்ஷிதா பிடிவாதம் பிடிக்கிறார். என்னதான் பிரச்சனை என்றெல்லாம் கேட்டு இருக்கிறார்கள்.

இந்நிலையில் இது தொடர்பாக ரக்ஷிதாவிற்கு நெருக்கமானவர்கள் கூறியிருப்பது, ரக்ஷிதா-தினேஷ் இருவருமே ஒருத்தர் மேல் ஒருத்தர் அன்பாக இருந்தார்கள். சீரியலில் ரக்ஷிதா ரொம்ப பிஸியாக இருந்தார். அப்போது தினேஷுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இதை ரக்ஷிதா பெரிதாகவே எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால், தினேஷ் செஞ்ச சில விஷயங்கள் ரசிதாவிற்கு பிடிக்கவில்லை. அதோடு வாய்ப்பு சரியாக அமையாததால் சினிமா டைரக்ட் பண்ண போகிறேன் தயாரிப்புகளும் தொடங்கி சீரியல் தயாரிக்க போறேன் என்று அவர் இறங்கினார். இதில் ரக்ஷிதாவிற்கு ஆர்வமில்லை. தினேஷ் தொடர்ந்து வற்புறுத்தியதால் தான் ஜீ தமிழ் சேனலில் தினேஷ் தயாரித்த நாச்சியாபுரம் தொடரில் அவர் நடித்தார். அந்த சீரியலும் பாதியிலேயே இன்று முடித்து விட்டார்கள். சீரியலை தயாரிக்க தினேஷ் கொஞ்சம் கடன் வாங்கி இருந்தார்.

-விளம்பரம்-

கடன் கொடுத்தவர்கள் எல்லாம் தினேஷ் மீது வழக்கு தொடர்ந்திருந்தார்கள். வழக்கில் ரக்ஷிதா பெரையும் சேர்த்து விட்டார்கள். இதனால் ரக்ஷிதா ரொம்ப கடுப்பாகிவிட்டார். அப்பதான் இவர்கள் இருவருக்கும் இடையே பிரச்சனை தொடங்கியது. வழக்கிலிருந்து ரக்ஷிதா பேரை தினேஷ் விடுவித்தார். இருந்தாலும் தொடர்ந்து பணப் பிரச்சனை இருவருக்கும் இடையே பெரிசாக மாறியது. ரக்ஷிதாவ பொறுத்தவரை அவருக்கு வாய்ப்பு இல்லாவிட்டாலும் கூட பரவாயில்லை தான் சம்பாதித்த பணத்தை வீண் செலவு செய்வது பிடிக்கவில்லை. இதை தினேஷ் சரி செய்யவில்லையே என்பதுதான் ஒரு கட்டத்தின் இவர்களுடைய பிரிவுக்கு காரணமானது. அதேபோல் போலீஸ் ஸ்டேஷனில் ரக்ஷிதா, தினேஷ் மீது புகார் கொடுத்ததற்கும் தினேஷ் செய்த வேலை தான்.

மேலும், இரண்டு பேர் மட்டும் தான் பிரிந்து இருக்கிறார்கள். இவர்கள் இருவருடைய குடும்பமும் நன்றாக தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள். பிரச்சனை பேசி முடிக்கலாம் என்று நினைக்கும் போது தினேஷ் அதை பெரிசாக்கி விடுகிறார். ரக்ஷிதா தரப்பில் வரும் பாசிட்டிவான விஷயங்கள் கூட அவரால் புரிஞ்சிக்க முடியவில்லை. சில நாட்கள் பேசாமல் அமைதியாக இருந்தாலே இருவரும் சேர்ந்து விடுவார்கள். இதை தினேஷ் செய்தால் இவர்களுடைய பிரச்சினை பாசிட்டிவான முடிவுக்கு வரும். இது மட்டும் இதுதான் ஒரே வழி. சில காலம் தினேஷ் பொறுமை காத்திருந்தால் கண்டிப்பாக இவர்கள் இருவரும் சேர வாய்ப்பு இருக்கிறது என்று கூறி இருக்கிறார்கள்.

Advertisement