நயன்தாராவின் அன்னபூரணி படத்திற்கு வந்த சிக்கல் – கண்டனத்தோடு ராஷ்ட்ரீய இந்து மகாசபா வெளியிட்ட எச்சரிக்கை.

0
231
- Advertisement -

அன்னபூரணி படத்திற்கு ராஷ்ட்ரீய இந்து மகாசபா விடுத்திருக்கும் எச்சரிக்கை தான் தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக லேடி சூப்பர் ஸ்டார் ஆக கலக்கி கொண்டிருப்பவர் நயன்தாரா. இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அதிக வசூலையும் பெற்று தந்திருக்கிறது.

-விளம்பரம்-

அதோடு சமீப காலமாகவே நயன் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைக்களத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த படங்களும் ஹிட் கொடுத்திருக்கிறது. கடைசியாக நயன்தாரா நடிப்பில் வெளியாகியிருந்த படம் ஜவான். இந்த படத்தை அட்லீ இயக்கி இருந்தார். ஹீரோவாக ஷாருக்கான் நடித்திருந்தார். இந்த படம் வெளியாகி உலக அளவில் ஆயிரத்து நூறு கோடிக்கு மேல் வசூல் செய்து இருக்கிறது.

- Advertisement -

அன்னபூரணி படம்:

இதனை எடுத்து தற்போது நயன்தாரா நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் அன்னபூரணி. இந்த படத்தை இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் நயன்தாராவுடன் ஜெய், சத்யராஜ், கே எஸ் ரவிக்குமார், ரெடின் கிங்ஸ்லி, சுரேஷ் சக்கரவர்த்தி உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இந்த படம் முழுக்க முழுக்க சமையலை மையமாக வைத்து இயக்குனர் கொடுத்து இருக்கிறார்.

கதைக்களம்:

படத்தில் நடிகை நயன்தாரா பிராமண குடும்ப பெண்ணாக நடித்து இருக்கிறார். இவருக்கு சின்ன வயதில் இருந்தே உணவை ருசி பார்ப்பதில் நிறைய திறமை இருக்கும். இதனால் இவரிடம் சமைத்து ருசி பார்க்க சொல்வார்கள். அதோடு இவருக்கு சமையல் மீது அதிக ஆர்வம் வந்துவிடும். அதோடு கோயிலில் இவருடைய தந்தை பிரசாதம் சமைப்பவர். இதனால் இவருக்கு அசைவம் பிடிக்காது. பின் நயன்தாரா தன்னுடைய கல்லூரியில் சமையல் கலை நிபுணராக சேர்ந்து கல்வி பயில்கிறார்.

-விளம்பரம்-

படம் குறித்த தகவல்:

இவருக்கு இந்தியாவின் தலைசிறந்த சமையல்கலை நிபுணராக வேண்டும் என்று ஆசைப்படுகிறார். தன்னுடைய குடும்பத்தின் எதிர்ப்பை மீறி தன்னுடைய லட்சியத்தை நயன்தாரா அடைந்தாரா? இல்லையா? இதற்கிடையில் அவர் எதிர்கொண்ட சிக்கல்களை எல்லாம் எப்படி சமாளிக்கிறார்? என்பதே படத்தின் மீதி கதை. மேலும், இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தை தடை செய்ய வேண்டும் என்று இந்து மகாசபா எச்சரிக்கை விடுத்து இருக்கும் தகவல் தான் வைரலாகி வருகிறது.

ராஷ்ட்ரீய இந்து மகாசபா:

பிராமண சமுதாயத்தை இழிவுபடுத்தும் வகையில் அன்னபூரணி படத்தின் கதை அம்சம் இருக்கிறது. இந்த படத்தை இயக்கிய நிலேஷ் கிருஷ்ணா என்பவரையும், படத்தில் நடித்த நயன்தாராவையும் வன்மையாக கண்டிக்கிறோம். இந்த திரைப்படம் திரையிட்டுள்ள திரையேட்டர்களை தமிழகம் முழுவதும் முற்றுகையிடப்படும் என்று பகிரங்கமாக எச்சரிக்கிறோம் என்று கூறியிருக்கிறார்கள். தற்போது இவர்களின் எச்சரிக்கை தான் சோசியல் மீடியாவில் பரபரப்பு ஏற்படுத்தி வருகிறது. இதற்கு படக்குழுவினர் தரப்பிலிருந்து என்ன பதில் வரப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Advertisement