தமிழ்நாடு குட்டிச் சுவராக மாற முக்கிய காரணம் நடிகை ராதிகா தான் காரணம் என்று அதிரடியாக கூறிய மூத்த அரசியல் விமர்சகர் காந்தராஜ். இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியது.நடிகை ராதிகா 1978 ஆம் ஆண்டு பாரதிராஜாவின் கிழக்கே போகும் ரயில் திரைபடத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் நடிகவேல் எம்.ஆர். ராதாவின் மகள் ஆவர். இவர் பத்தாண்டு காலம் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்தார். இவர் தமிழ் சினிமாவில் ரஜினி, கமல், விஜயகாந்த், பிரபு, கார்த்தி என முன்னனி நடிகர்களுடன் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் வலம் வந்தார்.
இவர் கதாநாயகியாக இல்லாவிட்டாலும் முக்கிய கதாபாத்திரங்கள் மூலம் தமிழ் சினிமாவில் தனி இடத்தை பிடித்தார் நடிகை ராதிகா. இவர் 2001ஆம் ஆண்டு நடிகர் சரத் குமாரை திருமணம் செய்து கொண்டார். இவரின் திருமண வாழ்வு மக்கள் மத்தியில் பெரும் பேசும் பொருளாகவே இருந்தது. நடிகை ராதிகா சன் டி.வியில் ஒளிபரப்பான சித்தி நாடகத்தின் மூலம் அனைத்து மக்களிடமும் நீங்க இடம் பிடித்துள்ளார்.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன் மூத்த அரசியல் விமர்சகர் காந்தராஜ் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் தமிழ்நாடு குட்டிச் சுவராக மாற முக்கிய காரணம் நடிகை ராதிகா தான் காரணம் என்று அதிரடியாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். அந்த பேட்டியில் அவர் கூறியது என்னவென்றால் கிழக்கு சீமையிலே திரைபடத்தில் இருந்து ராதிகாவின் நடிப்பு அருமையாக இருக்கும் அவரது நடிப்பு அனைத்து கதாபாத்திரங்களும் இவரது நடிப்பு அற்புதமாக இருக்கும் என்றும் கூறினார்.
மீண்டும் ஒரு காதல் திரைபடத்தில் மன நிலை குன்றியவராக நடித்து இருப்பார் அந்த படத்தில் இவரது நடிப்பு இன்று வரைக்கும் நன்றாக இருக்கும். மேலும் கூறிய அவர் சீரியல்களுக்கு மறுஉருவம் கொடுத்ததே ராதிகா தான் என்றார். இவரின் சித்தி நாடகம் பட்டி தொட்டி என அனைத்து பகுதிகளிலும் மக்களின் நீங்க வண்ணம் இடம் பெற்றுள்ளது. ராதிகாவின் சித்தி சீரியல் இன்று வரைக்கும் அனைவரையும் அடிக்டாக்கி வைத்து இருக்கிறது என்று சிரித்து கொண்டே சொன்னார்.
சீரியல்களுக்கு பெரிய மார்க்கெட் கொடுத்ததே இவர் தான் என்றும் தமிழ் சீரியலின் தாய் என்றால் ராதிகா தான் என்று கண்மூடிதனமாக சொல்லலாம். தமிழ் சீரியலில் தொடர்ச்சியாக ராதிகா நடித்த 4 சீரியல்களும் சூப்பர் ஹிட் என்று நடிகை ராதிகாவை புகழ்ந்தார் மூத்த அரசியல் விமர்சகர் காந்தராஜ்.